இரவில் உறங்கும் முன் இதை கட்டாயம் செய்திடுங்கள்

Report Print Printha in வீடு - தோட்டம்
227Shares
227Shares
ibctamil.com

வீட்டை எப்போதும் துர்நாற்றம் வீசாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள ஒருசில விதிமுறைகளை இரவு உறங்கும் முன் சரியாக பின்பற்றி வந்தாலே போதும்.

வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி?

  • இரவில் படுக்கும் முன், உணவு சமைத்த பாத்திரங்கள் மற்றும் உணவு சாப்பிட்ட தட்டுகள் அனைத்தையும் கழுவி, பாத்திரம் கழுவும் இடத்தில் எலுமிச்சை சாறு மற்றும் வினிகர் கலந்த கலவையால் சுத்தம் செய்ய வேண்டும்.

  • தினமும் இரவில் படுக்கும் முன், அடுப்பில் தண்ணீர் தெளித்து, வினிகர் மற்றும் உப்பு கலந்த கலவையை தெளித்து, சோப்பு பயன்படுத்தி தேய்த்து, ஈரத்துணியால் சுத்தம் செய்து வைக்க வேண்டும்.

  • ஒவ்வொரு நாளின் இறுதியிலும், தரை விரிப்பை கட்டாயம் சுத்தம் செய்து வைத்து விட வேண்டும். அதனால் வீட்டில் உள்ள தூசிகள் மூலம் அலர்ஜி ஏற்படுவதைத் தடுக்கலாம்.

  • படுக்கை அறையை இரவு உறங்கு முன் படுக்கை விரிப்புகளை நன்கு தட்டி சுத்தம் செய்த பின் உறங்க வேண்டும். இதனால் ஆரோக்கியமின்மை தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

  • வீட்டின் வெளியில் காலணிகளை வைப்பதற்கு உரிய இடத்தில் வைப்பதோடு, அந்த இடத்தை தினமும் சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

  • இரவு தூங்க செல்லும் முன், கழிவறையில் ஒரு வாளி தண்ணீரை விட்டு, கழிவறையின் ஜன்னல் அறையைத் திறந்து வைப்பதால், கழிவறை துர்நாற்றத்தை தடுக்கலாம்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்