இந்த பொருட்களை வீட்டில் வைத்து விடாதீர்கள்

Report Print Printha in வீடு - தோட்டம்
1005Shares
1005Shares
ibctamil.com

வீட்டை அழகாக வைத்திருக்க என்னென்ன பொருட்களை நம் வீட்டில் வைத்துக் கொள்ள கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.

வீட்டில் வைக்கக் கூடாத பொருட்கள்?

  • செய்தி தாள்களை நீண்ட நாட்கள் வீட்டிலேயே சேகரித்து வைத்துக் கொள்ளாமல், மாதத்திற்கு ஒரு முறையாவது அவற்றை வெளியேற்றி சுத்தம் செய்ய வேண்டும்.

  • நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில், கூல்டிரிங்ஸ் பாட்டில் போன்றவற்றை ஒருமுறை பயன்படுத்தி விட்டு அதை வீட்டில் சேர்த்து வைக்காமல் தூக்கி போட்டு விட வேண்டும்.

  • ஞாபகத்திற்காக சிறு வயதில் பயன்படுத்திய மொபைல், ஹெட் போன், சில எலக்ட்ரானிக் பொருட்கள், கிரீட்டிங் கார்டு மற்றும் கடிதங்கள் போன்றவற்றை வீட்டில் சேகரித்து வைக்கக் கூடாது.

  • ஷாப்பிங் செய்த பில், செக், மெடிக்கல் பில் போன்றவற்றை எப்போதாவது உபயோகப்படும் என்றால் அவற்றை ஒரு டிராயரில் சேகரித்து வைக்கலாம்.

  • மருந்துகள் தீர்ந்து விட்டால் அந்த பாட்டில்களை சேகரித்து வைக்காமல், அவற்றை தூக்கி போட்டு விட வேண்டும்.

  • ஷாம்பு பாட்டில், பேஸ்ட், நெயில் பாலிஸ் பாட்டில் போன்றவற்றை தீர்ந்தவுடன், வீட்டில் அடுக்கி வைக்காமல், தூக்கி போட்டால் வீட்டை அழகாக்கலாம்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்