இந்த செடிகளை கண்டிப்பாக வீட்டில் வளர்க்கவும்: இவ்வளவு நன்மைகளா?

Report Print Printha in வீடு - தோட்டம்
1075Shares
1075Shares
ibctamil.com

மூலிகைகளை தேடி நாம் மருந்து கடைகளுக்கு செல்வோம், ஆனால் பலன் தரக்கூடிய சில மூலிகை செடிகளை நம் வீட்டிலே வளர்க்கலாம்.

அதற்கு எந்த மாதிரியான மூலிகை செடிகளை நம் வீட்டில் வளர்த்து பாரமரிக்கலாம் என்பதை தெரிந்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

துளசி

துளசி செடி மருத்துவ குணங்களில் சிறந்தது, இந்த துளசியில் ராம துளசி, வன துளசி, கிருஷ்ணா துளசி, கற்பூர துளசி என்று நான்கு வகைகள் உள்ளது.

இதில் கற்பூர துளசி பெரும்பாலும் வெளிபயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் எண்ணெய் காது பிரச்சனைக்கு சொட்டு மருந்தாக பயன்படுகிறது.

துளசியில் கிருமி எதிர்ப்பு சக்தி, பூஞ்சை எதிர்ப்பு பொருள்கள், ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி பயோடிக் பொருட்கள் போன்றவை உள்ளது. இது காய்ச்சல், சலதோஷம் மற்றும் மூச்சு பிரச்சனைகள் போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது.

ராம துளசி இலையின் சாறு காய்ச்சல், சலதோஷம், இருமல் மற்றும் சுவாச பிரச்சனைகளை சரிசெய்து, மலேரியா, செரிமான பிரச்சனை, காலரா, இன்ஸோமினியா, ஹைஸ்ட்ரியா போன்றவற்றை எதிர்த்து செயல்பட உதவுகிறது.

வெந்தயம்

வெந்தயத்தின் விதைகள் மற்றும் இலைகள் நிறைய மருத்துவ குணங்கள் வாய்ந்தது. இது நமது உடம்பை குளிர்ச்சியாக வைப்பதற்கு உதவுகிறது.

மேலும் இது கல்லீரல் புற்றுநோய், பிரசவ வலி மற்றும் மாதவிடாய் வலி, அலர்ஜி, குடல் அலர்ஜி, குடல் அல்சர் ஆகிய பிரச்சனையை குணமாக்கி, ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.

இந்த அற்புதமான மூலிகை செடியை நம் வீட்டிலேயே வளர்க்கலாம்.

எலுமிச்சைப் புல்(Lemongrass)

லெமன் கிராஸ் எனும் எலுமிச்சை புல் மூலிகை செடியையும் நம் வீட்டிலேயே வளர்க்கலாம். இது எண்ணிலடங்காத மருத்துவ பயன்களை அள்ளித் தருகிறது.

இதை டீ, சாலட்ஸ், சூப், மற்றும் நிறைய சமையல் வகைகளில் பயன்படுகிறது. இந்த லெமன் கிராஸ் நரம்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது.

இந்த மூலிகை காய்ச்சல், மூச்சுப் பிரச்சனை மற்றும் தொண்டை புண் அடிவயிற்று வலி, தலைவலி, மூட்டு வலி, தசை வலி, செரிமான மண்டலக் கோளாறுகள், தசை சுருக்கம் ஆகிய பிரச்சனைகளை குண்மாக்க பயன்படுகிறது.

பாசில்(Basil)

மருத்துவ குணம் நிறைந்த இந்த மூலிகையை ஒரு சிறிய பூந்தொட்டியில் கூட வளர்க்கலாம். தாய் குஷைன் போன்ற உணவு வகைகளில் பயன்படுத்துகின்றனர்.

மேலும் இதை சாலட், சூப் மற்றும் மற்ற ரெசிபிகளிலும் பயன்படுகின்றனர். இது துளசி செடியிலிருந்து வித்தியாசமான ஒன்றாகும்.

இது வயிற்றில் உள்ள கேஸ், பசியின்மை, வெட்டுப்பட்ட காயங்கள் ஆறுவதற்கு போன்ற அனைத்திற்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

கற்றாழை

கற்றாழை ஒரு அற்புதமான மூலிகை செடியாகும். இது எங்கு வேண்டுமானாலும் நன்கு வளரக் கூடியது. எனவே இதை கண்டிப்பாக வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகை செடியாகும்.

இந்த செடியை வளர்ப்பதால் கொசுக்கள் வராமல் தடுக்கலாம். இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து அடிபட்ட, வெட்டப்பட்ட காயங்கள் மற்றும் தீ காயங்கள் போன்றவற்றை குணப்படுத்தும் மருந்தாக பயன்படுகிறது.

மேலும் இது சருமம் மற்றும் தலைமுடிகளை பாதுகாக்கவும், பசியின்மை, செரிமானக் கோளாறுகள், மலச்சிக்கல், குடல் அல்சர் போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது.

புதினா

புதினா மூலிகை செடியை ஒரு சிறிய தொட்டியில் வைத்து வீட்டிலேயே எளிதாக வளர்க்கலாம். இதில் இயற்கையாகவே மக்னீசியம், விட்டமின் A, C போன்றவை உள்ளது.

இதன் இலைகளிருந்து தயாரிக்கப்படும் சாறு தசைகள் தளர்ச்சி, வாய் துர்நாற்றம், வாய்வு, வயிற்று மந்தம், காய்ச்சல், எரிச்சலுடன் மலம் கழித்தல், பெருங்குடல் பிரச்சினை போன்ற பிரச்சனைக்கு மருந்தாக பயன்படுகிறது.

வல்லாரை கீரை

நம் வீட்டிலேயே வளர்க்க கூடிய ஈஸியான செடி வல்லாரை ஆகும். இது நமது மூளை வளர்ச்சி மற்றும் நினைவாற்றலுக்கு மிகவும் சிறந்தது.

இது அல்சர், சரும பாதிப்பு, ரத்த குழாய் சுருக்கம், மூளை மற்றும் நரம்பு மண்டலம் ஆகியவற்றிற்கு சிறந்தாக பயன்படுகிறது.

அஸ்வகந்தா

அஸ்வகந்தா எனும் மூலிகை செடி ஆயுர்வேத முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. இதை வீட்டிலேயே வளர்க்கலாம்.

இது மன அழுத்தம் மற்றும் நரம்பு மண்டலக் குறைபாடு, கருவுறுதல், காயங்களை குணப்படுத்துதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் போன்றவற்றிற்கு பயன்படுகிறது.

மேலும் இதயம் மற்றும் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது.

வேப்பிலை

வேப்பிலை மிகவும் பழங்கால மருத்துவ குணம் வாய்ந்த ஒன்று. மரமாக வளரும் இதை நம் வீட்டிலே வளர்க்கலாம்.

இதன் இலை சாறு மற்றும் எண்ணெய் ஒரு கிருமி நாசினியாக செயல்படுகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் இந்த மூலிகையை பயன்படுத்தலாம்.

எலுமிச்சை தைலம்(Lemon balm)

வீட்டில் வளர்க்கக் கூடிய மற்றொரு தாவரம் லெமன் பாம் ஆகும். இதன் இலைகள் பார்ப்பதற்கு லெமன் மர இலைகளை போல் இருப்பதால் இதற்கு இந்த பெயர் ஏற்பட்டது.

இதன் இலைகளை கசக்கி அதன் சாற்றை உடம்பில் தேய்த்து கொண்டால் இயற்கை கொசு விரட்டியாக செயல்படும்.

மேலும் இது தொண்டை புண், சலதோஷம், காய்ச்சல், தலைவலி, மன அழுத்தம், செரிமான மண்டல பிரச்சனைகள் போன்றவற்றை குணமாக்கும் மருந்தாக பயன்படுகிறது.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்