கியாஸ் விபத்து: அனைவருக்கும் பயன்படும் எச்சரிக்கை தகவல்கள்

Report Print Fathima Fathima in வீடு - தோட்டம்
472Shares
472Shares
ibctamil.com

தற்போதைய காலகட்டத்தில் கிராமங்களில் கூட விறகு அடுப்பு பயன்படுத்துவது மலையேறிவிட்டது.

பெரும்பாலானவர்கள் கியாஸ் அடுப்பு, இன்டக்சன் ஸ்டவ்வை தான் பயன்படுத்துகிறார்கள்.

கியாஸ் சிலிண்டரை பொறுத்தவரையில் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும், இதனால் விபத்துகளை தவிர்க்கலாம்.

 • சிலிண்டர் முதலில் வாங்கியதும், ரப்பர் டியூட் சிலிண்டர் வால்வின் உட்புறத்தில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
 • காற்றோட்டமான பகுதியில், உயரம் சமமாக உள்ள இடத்தில் செங்குத்தாக சிலிண்டரை வைக்க வேண்டும்.
 • கவுசிகள் ஏற்படுவது போல தெரிந்தால் உடனே சோப்பு நீரை கொண்டு பரிசோதிக்க வேண்டும்.
 • பிரிட்ஜ் போன்ற மின்சாதன பொருட்களை சமையலறைக்குள் வைக்கக்கூடாது.
 • எளிதில் தீப்பிடிக்கும், வெப்பம் நிறைந்த பொருட்களை சிலிண்டருக்கு அருகே வைக்கக்கூடாது.
 • இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சிலிண்டரின் ரப்பர் ட்யூப்பை மாற்றிக் கொள்ள வேண்டும்.
 • இரவு தூங்க செல்லும் முன்பும், வெளியே செல்லும் முன்பும் ஒரு முறைக்கு பல முறை ரெகுலேட்டர் வால்வு மூடி இருக்கிறதா? அடுப்பு அணைக்கப்பட்டு உள்ளதா என்பதை கவனிக்கவும்.
 • குழந்தைகள் தொடும் உயரத்தில் இருக்கக்கூடாது.
 • சமைக்கும் போது நைலான் ஆடைகளை அணியாதீர்கள்.
 • சமையல் அறையில் அடுப்பின் மேல் நேராக காற்றுபடும்படி மின்விசிறி இருக்கக்கூடாது.
திடீரென கசிவு ஏற்பட்டால்,
 • ரெகுலேட்டர் மற்றும் பர்னர் நாப்களை மூடிவிட வேண்டும்.
 • அந்த அறையில் உள்ள எலக்ட்ரிக் சுவிட்களை ஆன் செய்வதோ அல்லது ஏற்கனவே இயங்கி கொண்டிருந்தால் ஆப் செய்வதோ கூடாது.
 • உடனடியாக ஜன்னல்களை திறந்துவிட வேண்டும்.
 • கியாஸ் ஏஜென்ஸிக்கு போன் செய்து தகவலை தெரிவித்தால் உடனடியாக உதவுவார்கள்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்