இந்திய உச்சநட்சத்திரங்களின் வீடுகள் எப்படி இருக்கும் தெரியுமா?

Report Print Harishan in வீடு - தோட்டம்
631Shares
631Shares
ibctamil.com

இந்தியாவின் அதிக ஊதியம் பெரும் புகழ்பெற்ற பாலிவுட் நட்சத்திரங்கள் வசிக்கும் வீடுகள் குறித்து தெரிந்துகொள்வோம்.

அமிதாப் பச்சன்

பாலிவுட் பாட்ஷாவாக அறியப்படும் இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வசிக்கும் வீட்டின் விலை 112 கோடியாகும்.

அதிக வருமானம் பெறும் அமிதாப் பச்சனுக்கு சொந்தமாக 5 விலை உயர்ந்த பங்களாக்கள் இருந்தும், மும்பையில் இருக்கும் இந்த ‘ஜல்சா’ இல்லம் தான் அமிதாப் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் ஃபேவரைட்டாம்.

ஷாருக்கான்

பாலிவுட்டின் ராஜாவாக அறியப்படும் ஷாருக்கான் வசிக்கும் இந்த வீட்டின் மதிப்பு சுமார் 200 கோடியாகும். மும்பை பாந்த்ராவில் உள்ள இந்த வீட்டில் தான் ஷாருக் கான் தன் குடும்பதுடன் வசித்து வருகிறார்.

அது தவிர, இந்த வீடு ஒரு பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இதை எப்போதும் இடித்துத் தள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆமீர் கான்

ஆமீர் கான் வசித்து வரும் இந்த வீடு அவருக்கும் மிகவும் பிடித்தமான வீடு என பல இடங்களில் அவரே கூறியுள்ளார். இந்த வீட்டின் மதிப்பு 60 கோடியாகும்.

அக்‌ஷய் குமார்:

இரண்டு அடுக்கு குடியிருப்பில் வசித்து வரும் அக்‌ஷய் குமாரின் வீடு, ஜுஹு அருகே உள்ள கடலை பார்த்த வண்ணம் அனைந்துள்ளது குறிப்பிடத்தக்கது, இந்த வீட்டின் மதிப்பு 80 கோடியாகும்.

சல்மான் கான்:

மும்பை பாந்த்ராவில் வசித்து வரும் சல்மான் கானின் அடுக்குமாடி குடியிருப்பு 1079 சதுர அடி கொண்டதாகும். மிக துல்லியமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த வீட்டின் மதிப்பு 80 கோடியாகும்.

ரன்பீர் கபூர்:

ரன்பீர் கபூர் அவர் மூதாதையர்கள் வசித்த வீட்டில் தான் தற்போதும் வசித்து வருகிறார். பாரம்பரியமிக்க ரன்பீர் கப்பூர் தனது குடும்பத்தினருடன் வசித்து வரும் அந்த வீட்டின் மதிப்பு 70 கோடியாகும்.

ஜான் ஆப்ரகாம்:

அரபிக் கடலை பார்த்து மிக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் ஜான் ஆப்ரகாமின் வீடு, அவரின் தந்தை மற்றும் சகோதரரால் வடிவமைக்கப்பட்டது கூடுதல் தகவல். இந்த எழில்மிகு வீட்டின் மதிப்பு 60 கோடியாகும்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்