இதுதான் ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சனின் புதிய வீடு: சிறப்பம்சங்கள் என்னென்ன?

Report Print Harishan in வீடு - தோட்டம்
1015Shares
1015Shares
ibctamil.com

இந்தியாவின் நட்சத்திர ஜோடி ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன் வாங்கியுள்ள புதிய அடுக்குமாடி குடியிருப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பாலிவுட்டின் நட்சத்திர ஜோடியாக வலம் வருபவர்கள் அபிஷேக் பச்சன்- ஐஸ்வர்யா ராய் தம்பதியினர்.

மும்பை பாந்த்ராவில் சுமார் 5,500 சதுர அடியில் எழில்மிகு தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள புதிய குடியிருப்பு ஒன்றை ஐஸ்வர்யா- அபிஷேக் தம்பதியினர் வாங்கியுள்ளனர்.

குர்லா வளாகத்தில் அமைந்துள்ள அந்த உயர்ரக ஃபிளாட்டின் மதிப்பு 21 கோடி ரூபாவாகும்.

இவர்கள் சொந்தமாக வாங்கியுள்ள அழகிய உயர்ரக ஃபிளாட் தான் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சமீபத்தில் விராட் கோலி- அனுஷ்கா சர்மா வாங்கிய குடியிருப்பின் புகைப்படங்கள் வைரலாகி வந்த நிலையில் ஐஸ்வர்யா ஜோடி வாங்கியுள்ள புதிய பிளாட்டின் புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் தற்போது தன் தந்தை அமிதாப் பச்சனுடன் ‘ஜல்சா’ இல்லத்தில் குடும்பமாக வசித்து வரும் அபிஷேக் -ஐஸ்வர்யா ஜோடி, விரைவில் இந்த ஃபிளாட்டில் குடியேறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்