வீட்டில் செல்வ மழை கொட்ட வேண்டுமா? இந்த 10 பொருட்கள் போதுமாம்

Report Print Printha in வீடு - தோட்டம்

செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி தேவியை சந்தோஷமாக வைத்துக் கொண்டால், வீடு முழுவதும் லட்சுமி கடாட்சம் நிறைந்து செல்வம் பொங்கி வழியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

அந்த வகையில் நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க பூஜை அறையில் லட்சுமி தேவிக்கு பிடித்தமான சில பொருட்களை வைத்து வணங்க வேண்டும் என்று இந்து சமயத்திரு நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேங்காய்

தேங்காய் என்பது மிகவும் தூய்மையான பழமாக பார்க்கப்படுகிறது. அதனை வீட்டில் வைப்பதால் லட்சுமி தேவிக்கு நாம் அழைப்பு விடுவது போன்றதாகும்.

பாதரச சிலை

பாதரசம் அனைத்து கடவுள்களுக்குமே பிடித்த ஒன்று. அதனால் நம் வீட்டில் லட்சுமி தேவி மற்றும் விநாயகரின் பாதரச சிலையை வீட்டில் வைத்து வணங்க வேண்டும்.

சோவிகள்

சோவி என்பது கடலில் காணப்படும் சிப்பிகளின் வகை. லட்சுமி தேவியும் கடலில் இருந்து வந்தவர் என்பதால், வீட்டில் சோவிகளை வைத்தால் அது லட்சுமி தேவியை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது.

லட்சுமி மற்றும் விநாயகர் சிலைகள்

வெள்ளியில் செய்யப்பட்ட லட்சுமி தேவி மற்றும் விநாயகரின் சிலைகளை அருகருகே வைத்து பூஜை அறையில் வழிபட்டால், நம் வீட்டில் உள்ள செல்வ செழிப்புகள் அதிகமாகும்.

சங்கு

விசேஷ வகையான சங்கை நம் வீட்டு பூஜை அறையில் வைத்து வணங்கி வந்தால், செல்வம் அதிகமாகும்.

லட்சுமியின் கால்தடம்

லட்சுமி தேவியின் கால் தடங்கள் அல்லது வெள்ளியில் செய்யப்பட்ட கால் தடங்களை நம் வீட்டில் பணம் வைக்கும் திசையை நோக்கி வைக்க வேண்டும்.

தாமரை விதை ஜெபமாலை

லட்சுமி தேவி தாமரையில் வசிப்பவள். அதனால் நம் வீட்டில் தாமரை விதைகளில் செய்யப்பட்ட ஜெபமாலையை வைத்து வணங்குவது நல்ல பலனைக் கொடுக்கும்.

தெற்கு திசை சங்கு

சங்கில் தண்ணீரை நிரப்பி, நம் வீட்டு பூஜை அறையில் தெற்கு திசையை நோக்கி வைத்தால் வீட்டிற்குள் லட்சுமி தேவியின் வருகை நிச்சயம் இருக்கும்.

ஸ்ரீ யந்திரம்

ஸ்ரீயந்திரத்தில் மந்திர சக்திகள் அடங்கியுள்ளது என்று நம்பப்படுகிறது. செல்வத்தை ஈர்க்கும் இந்த ஸ்ரீயந்திரத்தை நம் வீட்டு பூஜை அறையில் வைத்தால் செல்வம் பெருகும்.

ஒற்றை கண் தேங்காய்

ஒற்றை கண் உடைய தேங்காயை மங்களகரமாக கருதப்படுகிறது. இந்த வகையான தேங்காயை தந்திரங்களுக்கு பயன்படுத்துவார்கள்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்