உங்கள் வீட்டில் செல்வம் பெருக உடனடியாக இதை செய்திடுங்கள்

Report Print Jayapradha in வீடு - தோட்டம்

என்னதான் பணத்தினை சேமித்து வைத்தாலும், உப்பு போல அது கரைந்துவிடுகிறது என புலம்புவர்களுக்காக இதோ சில வழிகள்.

மேலும் வாஸ்து சாஸ்திரத்தின் நம் வீட்டில் உள்ள சில பொருட்களை எந்த திசையை நோக்கி வைக்க வேண்டும், எப்படி வைக்கக் கூடாது என்பதை பற்றி தெரிந்துக் கொண்டு அதன்படி செய்தால், நம் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்குமாம்.

கடிகாரம்

கடிகாரத்தை கதவுகளுக்கு மேலே தொங்கவிடக் கூடாது. வீட்டின் தெற்கு பகுதியில் உள்ள சுவற்றில் கடிகாரத்தை மாட்டக் கூடாது.

கடிகாரத்தை கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு திசையில் உள்ள சுவற்றில் தொங்க விடுவது நல்லது. ஏனெனில் தெற்கு எமதர்மராஜாவின் திசையாகும்.

கண்ணாடி

வீட்டின் சுவற்றில் தொங்கவிடும் கண்ணாடி சதுரம் அல்து செவ்வக வடிவில் இருக்க வேண்டும்.

அதேபோல் கண்ணாடியை வடக்கு-கிழக்கு திசையில் வைப்பதே நல்லது. குறிப்பாக தரையில் இருந்து 4-5 அடிக்கு மேல் கண்ணாடி இருக்க வேண்டும்.

குதிரை ஓவியம்

குதிரைகள் ஓடும்படியான ஓவியத்தை படுக்கை அறையில் அலங்கரிப்பதற்காக வைத்து இருப்பார்கள். இந்த ஓவியம் நேர்மறை எண்ணங்களை உருவாக்குவதோடு, வீட்டில் செல்வ வளத்தையும் அதிகரிக்கும்.

குதிரை ஓவியத்தை நுழைவு வாயில், சமையல் மற்றும் குளியல் அறையை நோக்கி தொங்க விடக்கூடாது. இந்த ஓவியத்தை ஜன்னலுக்கு எதிர் புறத்தில் தொங்க விட வேண்டும்.

மணி ப்ளாண்ட்

மணி ப்ளாண்ட் என்ற செடியை நமது வீட்டில் வளர்த்தால், செல்வ வளம் அதிகரிக்கும். எனவே இந்த மணி ப்ளாண்ட்டை வடக்கு-கிழக்கு திசையை நோக்கி வைத்து வளர்ப்பதே மிகவும் சிறந்தது.

ஓடும் நீர் காட்சிகள்

சிலர் வீட்டை அலங்கரிப்பதற்காக ஓடும் நீர் போன்ற காட்சிகளை வைத்திருப்பார்கள். அப்படி இருக்கும் அந்த காட்சி பொருட்களை வடகிழக்கு திசையை நோக்கி வைப்பதை மட்டும் தவிர்ப்பது மிகவும் சிறந்தது.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்