வெள்ளை பூண்டை வீட்டின் முன் கட்டினால் என்ன ஆகும் தெரியுமா?

Report Print Jayapradha in வீடு - தோட்டம்

வீட்டில் பணம் கொழிக்க வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது. என்னதான் பணத்தினை சேமித்து வைத்தாலும் உப்பு போல அது கரைந்துவிடுகிறது என புலம்புவர்களுக்காக இதோ சில வழிகள்.

வீட்டில் பணமழை கொட்ட செய்ய வேண்டியவை
  • 7 பற்கள் மட்டுமே உள்ள வெள்ளை பூண்டு வாங்கி வந்து அதுதான் 7 காய்ந்த மிளகாய்களையும் சேர்த்து ஒரு நூலில் கட்டி வீடு,கடை,ஆபீஸ் வாசல்களில் தொங்க விட திருஷ்டிகள் சகலமும் விலகி நன்மை சேரும்.
  • நடுத்தர மற்றும் பாமரக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சந்தன மரப்பெட்டிக்குப் பதிலாக கருப்புப் புள்ளி இல்லாத புது மண்பானை, சுரைக்குடுவை,தேக்கு மரப்பெட்டி இவற்றில் ஏதாவது ஒன்றை வாங்கி மேற்கூறியவாறு பயன்படுத்தலாம்.
  • உங்களது வீட்டில் அல்லது பணிபுரியும் இடத்தில் அல்லது உங்களது தொழிற்சாலையில் ஒரு சிறு சந்தன மரப்பெட்டியை வாங்கி வைக்க வேண்டும்.
  • அந்தப் பெட்டிக்குள் வில்வம்,துளசி,வன்னி,ஆல இலை,வெற்றிலை, மஞ்சள், குங்குமம், மல்லிகை, தாமரை போன்றவற்றைப் பூஜித்து வைக்க வேண்டும்.
  • இதில் பணத்தை வைத்தெடுக்கும் பழக்கத்தை நாம் கொண்டு வரவேண்டும்.வெள்ளிக்கிழமைகளில் வாரம் அல்லது மாதம் ஒரு வெள்ளிக்கிழமை முழுக்கவும் நாம் சம்பாதிக்கும் பணத்தை அப்படியே வைத்திருக்கவேண்டும். மறுநாள்,அந்தப்பணத்தை மற்ற காரியங்களுக்குப் பயன்படுத்திட வேண்டும்.
  • இப்படி அடிக்கடி செய்தால், நமது பணம் நியாயமாகவும், நல்ல விதமாகவும் நம்மை வந்தடையும், நம்மிடம் சேரும். பயனுள்ள வகையில் மட்டுமே செலவழியும்.
  • சனிக்கிழமையன்று நவதானிய அடைதோசை நல்லெண்ணெய் விட்டுச்சாப்பிட்டால் நவக்கிரகங்கள் திருப்தியடையும். இதனால், அஷ்டமச்சனி, கண்டகச்சனி, ஏழரைச்சனி முதலியவற்றின் தாக்கம் குறையும்.
  • தினமும் ஏதாவது மந்திர ஜபம் செய்துவிட்டு நமது தினசரிக் கடமைகளைத் துவக்க வேண்டும். அப்படி மந்திர ஜபம் முடிந்த வுடனே ஒரு டம்ளர் இளநீர் அருந்தினால் நாம் ஜபித்த மந்திர அலைகள் நம் உடலுக்கு உள்ளேயே பதிவாகிவிடும்.
  • கார்த்திகை , மகம், உத்திரம், சித்திரை, மூலம், ரேவதி நட்சத்திரங்களில் எவருக்கும் எதையும் கொடுக்கவும் வாங்கவும் கூடாது.அப்படிச்செய்தால் வறுமை உங்களை வந்தடையும் என்பது ஐதீகம்.
  • அரச மரத்தை சனிக்கிழமை காலை 8 மணிக்குள் 108 முறை வலம் வந்து பின்பு தூப,தீபம்-நிவேதனம் செய்து வலைப்பட்டால் பண புழக்கம் அதிகரிக்கும். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செய்து வரலாம்.
  • செவ்வாயின் பாகமான தெற்கில் 7 நல்லெண்ணை விளக்கு (மண்) வைத்து தூபம் காட்டி வேண்டி வர, வருடக்கணக்கில் வராத கடன்களும் வந்து சேரும். ஏமாற்றப்பட்ட பொருட்களும் திரும்ப சேரும்.வீட்டிலேயே செய்யலாம்.
  • வீட்டை விட்டு வெளியே கிளம்பும் பொழுது அருகம் புல் நுனி ஒன்று பறித்து எடுத்து பாக்கெட்டில் வைத்து செல்ல செல்லும் காரியம் வெற்றி அடையும்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers