வாஸ்து சாஸ்திர படி இந்த செடிகள் எல்லாம் வீட்டில் வைத்து விடாதீங்க.... எதிர்மறை சக்திகள் அதிகரிக்குமாம்!

Report Print Kavitha in வீடு - தோட்டம்

வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டிற்குள் வைக்கப்படும் தவறான செடிகள் எதிர்மறை சக்திகளை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகின்றது.

வீட்டில் வைக்கப்படும் தவறான செடிகளால் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் மட்டுமின்றி இது வீட்டிற்குள் தீய சக்தியை அழைத்து வருகின்றது.

தற்போது நமது வீட்டில் வைக்க கூடிய செடியும், வைக்க கூடாதா செடிகள் என்ன என்பதை பார்ப்போம்.

செயற்கை மலர்கள்

வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டிற்குள் செயற்கை செடிகளை வைப்பது உங்கள் வீட்டின் சூழலில் பாதிப்பை ஏற்படுத்தும்.

இது அதிகளவு சூரிய ஒளியையும், நாற்றத்தையும் உண்டாக்கும். எனவே செயற்கை மலர்களை ஒருபோதும் உங்கள் வீட்டில் வைக்காதீர்கள்.

மூங்கில் செடி

வீட்டில் மூங்கில் செடி வைப்பது என்பது அதிர்ஷ்டம் மற்றும் புனிதமானதாக கருதப்படுகிறது. வீட்டில் மூங்கில் செடி வைக்கப்படும் போது அது பஞ்சபூதங்களையும் பிரதிபலிப்பதாக கருதப்படுகிறது.

மூங்கில்செடி ஒரு கொள்கலனின் கற்களுடன் இரண்டு அல்லது மூன்று இன்ச் தண்ணீரில் வைக்கப்பட வேண்டும்.

இதனுடன் ஒரு நாணயத்தை வைப்பது கூடுதல் சிறப்பானதாகும். இந்த கொள்கலனை ஒரு சிவப்பு நூல் கொண்டு கட்டவும்.

போன்சாய் மரங்கள்

போன்சாய் மரங்களை வீட்டிற்குள் வைப்பதை காட்டிலும் அலுவகத்தில் வைப்பது நல்ல பலனைத்தரும்.

போன்சாய் மரங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கலாம் ஆனால் அவை நேர்மறை சக்திகளை பிரதிபலிக்காது. அவை மெதுவான வளர்ச்சியை பிரதிபலிப்பதாகும். இதனை வீட்டிற்குள் வைத்து வளர்ப்பது அவ்வளவு நல்லதல்ல.

இதனை அலுவலக அறையின் தென்கிழக்கு அல்லது தெற்கு மூலையில் வைப்பது நல்லது. இது அறைக்குள் அதிக காற்றோட்டத்தை கொண்டுவரவல்லது.

போன்சாய் மரங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகளை கண்டறிய உதவும். இவை மிகவும் மென்மையானவையாகும்.

உங்கள் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ இருக்கும் போன்சாய் மரம் இறந்து விட்டால் அதே இடத்தில் மற்றோர் போன்சாய் மரத்தை வைக்கவும். அதுவும் இறந்து விட்டால் அந்த இடத்தில் நிச்சயம் எதிர்மறை சக்திகள் இருக்கிறது என்று அர்த்தம்.

வைக்க வேண்டிய செடிகள்

வீட்டிற்கு வெளியே பெரிய செடிகளை வைத்து வளர்க்க முடியவில்லை என்றால் வீட்டிற்குள்ளேயே வைத்து வளர்க்கக்கூடிய செடிகளை வாங்கி வளர்க்கவும்.

உங்கள் வீட்டின் வாசலில் ஆரஞ்சு அல்லது எலுமிச்சை மரத்தை வளர்ப்பது மிகவும் நல்லதாகும். இது உங்கள் வீட்டை தீயசக்திகளிடம் இருந்து பாதுகாக்க உதவும்.

மணி பிளேண்ட்ஸ் தென்கிழக்கு திசையில் வைத்து வளருங்கள். ஏனெனில் தென்கிழக்கு திசைதான் குபேரரின் திசையாகும். எந்த செடிகள் வளர்த்தாலும் அந்த இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், இறந்த மலர்கள் இருந்தால் அதனை உடனே அப்புறப்படுத்துவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

வைக்கக்கூடாத செடிகள்

கள்ளி செடியை உங்கள் படுக்கையறை, அலுவலக மேஜை போன்ற இடத்தில் வைக்கக்கூடாது. அதனை வீட்டிற்கு வெளியே மட்டுமே வைக்க வேண்டும்.

செவ்வந்தி, சம்பங்கி போன்ற மலர்களின் வாசனை உங்களுக்கு பிடித்தால் அதனை உங்கள் தோட்டத்தில் வைத்து வளர்க்க வேண்டுமே தவிர வீட்டிற்குள் வைத்து வளர்க்கக்கூடாது. ஏனெனில் இதன் வாசனை உங்கள் வீட்டிற்கு தேவையில்லாத எதிர்மறை சக்திகளை அழைத்துவரும்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்