உங்கள் வீட்டில் இந்த ஓவியங்கள் இருந்தால் உடனே தூக்கி ஏறியுங்க... குடும்பத்திற்கு துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்துமாம்!

Report Print Kavitha in வீடு - தோட்டம்

வாஸ்து சாஸ்திரத்தின் படி ஓவியங்களில் நேர்மறை ஓவியங்கள் மற்றும் எதிர்மறை ஓவியங்கள் என்று இரண்டு உள்ளது.

உங்கள் வீட்டிற்கு நன்மை மற்றும் தீமையை ஏற்படுத்த கூடிய ஓவியத்தை என்னென்ன என்பதை பார்க்கலாம்.

வைக்க வேண்டிய ஓவியங்கள்

நதி பாய்வது அல்லது மீன் நீந்துவது போன்ற படங்களை உங்கள் வீட்டின் அதிர்ஷ்டமான இடத்தில் வைப்பது உங்கள் வாழ்வில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் மற்றும் இது போன்ற ஓவியம் நீங்கள் பணம் வைக்குமிடம் போன்ற இடங்களில் வைக்கப்பட்டால் உங்கள் வீட்டில் நிலையான செல்வம் இருக்கும்.

பறவைகள் பறப்பது போன்ற படங்களை இந்த இடத்தில் வைப்பது செல்வத்தின் வரவை அதிகரிக்கும்.

உங்கள் வீட்டிற்குள் போதுமான சூரிய ஒளி வரவில்லை என்றால் பிரகாசமான சூரியன் இருக்கும் படமொன்றை உங்கள் வீட்டில் வையுங்கள். இது உங்கள் வீட்டிற்குள் நேர்மறை சக்திகளை அழைத்துவரும்.

உங்கள் அறையிலும், உங்கள் குழந்தைகளின் அறையிலும் மான் இருக்கும் ஓவியங்களை வையுங்கள் இது ஆரோக்கியத்தின் அடையாளமாகும்.

பைன் மரங்கள் இருக்கும் ஓவியங்களை உங்கள் வீட்டில் மாட்டுவது உங்கள் வீட்டில் இருக்கும் அனைத்து எதிர்மறை சக்திகளையும் விரட்டும். வெள்ளை பின்னணியில் இந்த மரங்கள் இருப்பது போன்ற ஓவியங்களை வைப்பது நல்லது.

வைக்க கூடாத ஓவியங்கள்

பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பு தொடர்பான ஓவியங்களை ஒருபோதும் உங்கள் வீட்டில் மாட்டாதீர்கள்.

தீமை, தனிமை, துக்கத்தை பிரதிபலிப்பது போன்ற ஓவியங்களை வீட்டின் எந்த அறையிலும் வைக்காதீர்கள். இது உன்னால் குடும்பத்திற்கு துரதிர்ஷ்டத்தையும், ஆரோக்கிய பிரச்சினைகளையும் கொண்டுவரும்.

உங்களுக்கு பிடித்தவர்களின் படத்தை ஒருபோதும் வடகிழக்கு திசையில் வைக்காதீர்கள். இறந்தவர்களாகவே இருந்தாலும் அவர்களின் படங்களை இந்த திசையில் வைப்பது நல்லதல்ல.

பறவைகளின் ஓவியங்களை வீட்டில் வைக்க விரும்பினால் ஒருபோதும் தனிமையில் இருக்கும் பறவையின் ஓவியத்தை வைக்காதீர்கள்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்