வாஸ்துப்படி மணி பிளான்ட்டை எந்த திசையில் வைத்தால் செல்வம் பெருகும்?

Report Print Kavitha in வீடு - தோட்டம்
487Shares

மணி பிளாண்ட் அதிர்ஷ்டம் தரும் செடியாக கருதப்படுகின்றது.

சொத்து, சுகம், ஆரோக்கியம் மற்றும் சந்தோஷத்தை பெருகச் செய்யும் என்று நம்பப்படுகிறது.

மேலும் இது கடன் தொல்லை தீரும் என்ற நம்பிக்கை மக்களின் மத்தியில் இன்று வரையிலும் இருந்து வருகிறது.

அந்தவகையில் இந்த மணிபிளாண்டினை சரியான திசையில் வைத்தாலே நன்மை கிடைக்கும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றார்கள்.

அதன் அடிப்படையில் தற்போது மணி பிளாண்டினை எந்த திசையில் வைக்கலாம் என்பதை இங்கு பார்ப்போம்.

வாஸ்து நிபுணர்கள் மணி பிளான்ட்டை தென்கிழக்கு திசை நோக்கி தான் வளர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

  • நேர்மறையான சக்தி தென்கிழக்கு திசையில் தான் அதிகம் பாஸிடிவ் எனர்ஜி கிடைக்கிறது என்பதால், இந்த திசையில் தான் மணி பிளான்ட் நன்கு வளரும் மற்றும் இதனால் செல்வம் பெருகும் யோகம் பெற முடியும்.
  • விநாயகரின் திசை தென்கிழக்கு திசை விநாயகருக்கு உகந்த திசையாகும். மற்றும் இது சுக்கிரனை பிரதிநிதித்துவம் செய்யும் திசை எனக் கூறப்படுகிறது.
  • இதன் காரணங்களுக்காக தான் மணி பிளான்ட்டை தென்கிழக்கு திசையில் வைக்க சொல்லி கூறுகிறார்கள்.
  • செல்வம் பெருகும் மணி பிளான்ட் மணி பிளான்ட்டை மண்ணிலும் வளர்க்கலாம், நீரிலும் வளர்க்கலாம். அதே போல, வீட்டின் உட்புறம், வெளிப்புறம் என அவரவர் விருப்பப்படி எங்கு வேண்டுமானாலும் வைத்து வளர்க்கலாம். இதனால் உங்கள் வீட்டில் செல்வம் பெருகும்.
  • ஓரிரு இலைகள் வாடினால் கூட விரைவாக அந்த இலைகளை அகற்றிவிடுங்கள், இல்லையேல் இது பரவி மொத்த செடியையும் அழித்துவிடும்.

மேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்