திமுக தலைவர் கருணாநிதி - மு.க.அழகிரி திடீர் சந்திப்பு

Report Print Aathi Aathi in இந்தியா
திமுக தலைவர் கருணாநிதி - மு.க.அழகிரி திடீர் சந்திப்பு

திமுக தலைவர் கருணாநிதியை திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரி இன்று சந்தித்து பேசியுள்ளார்.

திமுக பொருளாளர் ஸ்டாலினுக்கு எதிராக கருத்து தெரிவித்த காரணத்தால் மு.க அழகிரி திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார்.

இதையடுத்து கருணாநிதியை சந்திப்பதை தவிர்த்து வந்த அழகிரி, அவரது தாயாரை மட்டும் அவ்வப்போது சந்தித்து வந்தார்.

பின்னர் கடந்த மார்ச் மாதம் 24ம் திகதி, திடீரென கருணாநிதியை அழகிரி சந்தித்து பேசினார். அதுபற்றி கூறிய அழகிரி, தந்தை என்ற முறையில் கருணாநிதியை சந்தித்ததாக கூறினார்.

இதைத்தொடர்ந்து, மு.க.அழகிரி தனது பேஸ்புக் பக்கத்தில் "சூரியனுக்கு சொந்தங்கள் நாங்கள், ஆதரிப்பீர் உதயசூரியன்" என்று பதிவிட்டார். இது திமுகவினர் மத்தியில் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று காலை மீண்டும் கருணாநிதியை அழகிரி சந்தித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சந்திப்பின் போது தமிழ்ப் புத்தாண்டான சித்திரை திருநாளில் கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றதாக அழகிரி தெரிவித்துள்ளார்.

திமுக வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்ட நிலையில் அழகிரி கருணாநிதியை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments