திமுகவின் அறிக்கையை ரீட்வீட் செய்த ராதிகா? சரத்குமாருக்கு ஆதரவாக பிரசாரம்

Report Print Aathi Aathi in இந்தியா
திமுகவின் அறிக்கையை ரீட்வீட் செய்த ராதிகா? சரத்குமாருக்கு ஆதரவாக பிரசாரம்

சரத்குமாருக்கு ஆதரவாக அவரது மனைவி ராதிகா 2 நாட்கள் திருச்செந்தூர் தொகுதியில் பிரசாரம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் இரட்டை இலைச் சின்னத்தில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

ஏற்கனவே திருச்செந்தூர் தொகுதியில் சரத்குமார் பிரசாரத்தை தொடங்கிய நிலையில், தற்போது அவருக்கு ஆதரவாக அக்கட்சியின் மாநில மகளிரணிச் செயலாளர் ராதிகா சரத்குமார் 2 நாட்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதற்கட்டமாக வருகிற 16 மற்றும் 17ம் திகதிகளில் அவர் பிரசாரம் மேற்கொள்ளதாக அக்கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக ராதிகா சரத்குமார் திமுகவின் தேர்தல் அறிக்கை தொடர்பான செய்தியை ரீட்வீட் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள ஆவின் பால் விலையை குறைப்போம் என்ற வாக்குறுதியைப் பிரசுரித்த செய்தியை அவர் ரீட்வீட் செய்துள்ளார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி உள்ள நிலையில், ராதிகா திமுகவின் தேர்தல் அறிக்கை தொடர்பான செய்தியை ரீட்வீட் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments