காதலியை தேடும் உயர்ந்த மாணவன்!

Report Print Arbin Arbin in இந்தியா
காதலியை தேடும் உயர்ந்த மாணவன்!

இந்தியாவின் மிக உயரமான மாணவன் தனது உயரத்திற்கு ஏற்ற காதலி வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள சம்பவம் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மராட்டிய மாநிலம் சோலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் யஷ்வந்த் ராவுத்.

வெறும் 14 வயதேயான யஷ்வந்த் தற்போது 6 அடி 7 அங்குலம் உயரமாக வளர்ந்துள்ளார். அவரது வளர்ச்சி இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள்தெரிவித்துள்ளனர்.

சராசரி உயரம் கொண்ட சாதாரண குடும்பத்தில் பிறந்த யஷ்வந்த், அவருக்கு இருக்கும் இந்த அதீத வளர்ச்சி பிரச்னையால் தினமும் அல்லல்பட்டு வருவதாக கூறுகின்றார்.

அவரது உயரத்துக்கேற்ற படுக்கை வசதி இல்லாததால் இரவில் சரிவர படுத்துறங்கி வெகு நாளானதாக கூறும் யஷ்வந்திற்கு தற்போது எழுந்துள்ள பெரும் கவலை என்பது, உரிய வயதாகும் போது தமக்கு ஏற்ற துணை கிடைக்காமல் போகுமோ என்பது தான்.

அப்படி கிடைக்காமல் போகும் எனில் தாம் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என யஷ்வந்த் தெரிவித்திருக்கிறார்.

சிறந்த கூடைப்பந்து வீரராக வேண்டும் என்பதே தமது சிறு வயது கனவு என தெரிவித்திருக்கும் யஷ்வந்த், அதற்காகவே அதிக உயரத்தில் வளர வேண்டும் என சிறு வயதில் ஆசைப்பட்டாராம்,

ஆனால் அந்த வளர்ச்சி இப்படி அதீதமாக அமையும் என கனவிலும் நினைக்கவில்லை என கூறும் யஷ்வந்த், எதிர்காலத்தில் இந்திய நாட்டிற்காக கூடைப்பந்து வீரராக களம் காண வேண்டும் என்பதே தமது நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments