இன்று அட்சய திருதியை: நகைக் கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

Report Print Aathi Aathi in இந்தியா
இன்று அட்சய திருதியை: நகைக் கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

தமிழகம் முழுவதும் அட்சய திருதியை இன்று கடைபிடிக்கப்படுவதால் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.

சென்னையில் தியாகராயநகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், பாரிமுனை, சௌகார்பேட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள நகைக் கடைகளில் நகைகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, சென்னை தி.நகர் முழுவதும் ஓர் உதவி ஆணையர் தலைமையில் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உள்பட 600 பொலிஸார் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

தி.நகர் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை ஆகிய இடங்களில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி குற்றங்களில் ஈடுபடுவோரைக் கண்காணிக்க 3 இடங்களில் உயர் கண்காணிப்புக் கோபுரங்கள், 80 கண்காணிப்பு கேமராக்கள் அமக்கப்பட்டுள்ளன.

இதே போன்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் 60-க்கும் மேற்பட்ட பொலிஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments