அரசியல் களத்தில் உதயநிதி: ஸ்டாலின் பதில்?

Report Print Aathi Aathi in இந்தியா
அரசியல் களத்தில் உதயநிதி: ஸ்டாலின் பதில்?

திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், என்னுடைய குடும்பத்தில் வேறு யாரும் அரசியலுக்கு நிச்சயமாக வர மாட்டார்கள் என பதிலளித்துள்ளார்.

கேள்வி: ஜெயலலிதா தனது ஒவ்வொரு பிரச்சாரத்திலும் தி.மு.க.வை குடும்ப கட்சி என்றும் உங்கள் ஆட்சியை குடும்ப ஆட்சி என்றும் சொல்லி வருகிறார். அதை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்?

பதில்: சசிகலாவை பக்கத்தில் வைத்துக் கொண்டு அவர்கள் குடும்ப ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், அதை மூடி மறைப்பதற்காக திட்ட மிட்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக செய்யக் கூடிய ஒரு உத்தியை அவர் கையாண்டு இருக்கிறார். அது தவிர வேறொன்றும் அல்ல.

என்னைப் பொறுத்தவரையில், நான் 45 ஆண்டுகளாக அரசியலில் இருந்து கொண்டு இருக்கிறேன். அதுவும் தி.மு.க.வில் கிளைக் கழகத்தில் இருந்து தொடங்கி நகரக் கழகம், பகுதி கழகம், மாவட்டக் கழகம், தலைமைக் கழகம் என்று படிப்படியாக வளர்ந்து வந்திருக்கிறேன்.

ஆகவே என்னை வைத்து அவர் இப்படி சொல்வதை தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

கேள்வி: உங்கள் குடும்பத்தில் இருந்து இன்னும் யாராவது அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதா?

பதில்: என்னுடைய மகனாக இருந்தாலும் சரி, என்னுடைய மருமகனாக இருந்தாலும் சரி, என்னுடைய குடும்பத்தில் வேறு யாராக இருந்தாலும் அரசியலுக்கு நிச்சயமாக வர மாட்டார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிலளித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments