யார் சொல்வதையா நம்புவது? குழப்பத்தில் விஜயகாந்த்!

Report Print Basu in இந்தியா
யார் சொல்வதையா நம்புவது? குழப்பத்தில் விஜயகாந்த்!

அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சொன்னதை நம்புவதா? இல்லை தற்போது ஜெயலலிதா சொல்வதை நம்புவதா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் விமர்சித்துள்ளார்.

சென்னை மதுரவாயலில் நடந்த தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி-தமாகா அணியின் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய விஜயகாந்த் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என மக்கள் போராடிய போது,

மதுவிலக்கு துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியது, தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் மதுவிலக்கு அமலில் இல்லை, அதனால் தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த சாத்தியமே இல்லை என்றார்.

அதையும் மீறி தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றால், அதற்கு மத்திய அரசு தான் உதவி செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

தற்போது, அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்துள்ளார்.

இதில் யார் சொல்வதை நம்புவது?

தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த முடியவே முடியாது என நத்தம் கூறினார், ஆனால் தற்போது ஜெயலலிதா படிப்படியாக குறைப்போம் என கூறியுள்ளார்.

இதில் யார் சொல்வதை நம்ப சொல்றீங்க என தேமுதிக தலைவர் விஜயகாந்த் மக்களை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments