இளைய தளபதியின் ஆதரவு யாருக்கு? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Report Print Basu in இந்தியா
இளைய தளபதியின் ஆதரவு யாருக்கு? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் மக்கள் இயக்கத்தின் ஆதரவு அதிமுக கட்சிக்கு என்று விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

எதிர்வரும் 2016 சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் ஆதரவு யாருக்கு என்ற மிகுந்த எதிர்பார்ப்புகளும், பல வதந்திகளும் பரவியது.

இந்நிலையில் அனைத்திற்கும்முற்றுபுள்ளி வைக்கும் வகையில், தற்போது விஜய்யின் மக்கள் இயக்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அகில இந்திய இளையதளபதி விஜய் தலைமை நற்பணி இயக்கத்தின் பொறுப்பாளர் புஸ்ஸி என்.ஆனந்து வெளியிட்ட அறிக்கை:

வருகின்ற 2016 சட்டமன்ற தேர்தலில் இளையதளபதி விஜய் மக்கள் இயக்கம் நடுநிலை வகிக்க முடிவு செய்துள்ளது.

அதாவது எந்தக் கட்சிக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு அளிக்கவில்லை. அதேசமயம் இளையதளபதி ரசிகர்கள் தங்கள் விருப்பத்திற்கு தகுந்தாற்போல, தாங்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்கலாம்.

ஆனால் இளையதளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ, கொடியையோ பயன்படுத்தக்கூடாது.

இயக்கத்தின் இந்த நிலைப்பாடு குறித்து நிர்வாகிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதோடு, மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்ஊடகங்களில் விஜய் மக்கள் இயக்கம் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு அளித்தது போல் செய்திகள் வருகின்றன. அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்தியாகும்.

எனவே, விஜய் ரசிகர்கள் குழப்பம் அடையாமல், வருகின்ற தேர்தலில் தாங்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்கலாம், அதே நேரத்தில் இயக்கத்தின் பெயர் மற்றும் கொடியைப் பயன்படுத்தக்கூடாது என கண்டிப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவின் மூலம், எதிர்காலத்தில் தமிழகத்தில் யார் ஆட்சி செய்தாலும், தனக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் விஜய் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது சிறப்பே.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments