தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பலியானோர் எண்ணிக்கை உயர்வு!

Report Print Basu in இந்தியா
தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பலியானோர் எண்ணிக்கை உயர்வு!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் மே-16 ஆம் திகதி நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்த நாள் முதலே,தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.

தேர்தல் களம் சூடுபிடித்ததோ இல்லையோ, கடந்த டிசம்பர் மாதம் பொழிந்த மழையை ஈடுகட்டும் வகையில் சுட்டெரிக்கும் வெயிலினால் தமிழகம் சூடனாது.

மக்களை பார்க்க வெளியே வரமாட்டாரா என்று விமர்சிக்கப்பட்ட அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி சென்னையில் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்தார்.

கடந்த ஏப்ரல்27ம் திகதி மதுரை ரிங்ரோட்டில், ஜெயலலிதா தலைமையில் நடந்த அதிமுக பிரசாரக் கூட்டத்தில் மயங்கிய அதிமுக தொண்டர் காத்தமுத்து (43), சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

இவரையும் சேர்த்து இதுவரை ஜெயலலிதா பிரசாரத்தில் பலியானோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக, விருத்தாசலத்தில் 2 பேர், சேலத்தில் 2 பேர், அருப்புக்கோட்டையில் ஒருவர் என மொத்தம் 5 பேர் ஏற்கனவே பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments