களம் காணும் கோடீஸ்வர வேட்பாளர்கள்: முதலிடம் பிடித்த கட்சி?

Report Print Arbin Arbin in இந்தியா
களம் காணும் கோடீஸ்வர வேட்பாளர்கள்: முதலிடம் பிடித்த கட்சி?
1250Shares
1250Shares
lankasrimarket.com

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சி வேட்பாளர்களில் சிலர், முதல்வர் ஜெயலலிதாவை விட அதிக சொத்து வைத்துள்ளனர்.

தமிழக தேர்தலில் போட்டியிடும் பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரங்களை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு (ஏடிஆர்) ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மே 16 நடைபெறவிருக்கும் தேர்தலில் 3776 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் பிரதான அரசியல் கட்சிகளின் சார்பில் 1107 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் 997 பேரின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்து ஏடிஆர் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

போட்டியிடும் வேட்பாளர்களில், திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஹெச்.வசந்தகுமார் அதிக சொத்துகளை வைத்துள்ளார். அவரிடம் ரூ. 337 கோடி சொத்து உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இவருக்கு அடுத்தப்படியாக சென்னை அண்ணா நகரில் திமுக சார்பில் போட்டியிடும் எம்.கே.மோகன், தன்னிடம் ரூ. 170 கோடி சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவதாக சென்னை ராதாகிருஷ்ணன் நகரில் அதிமுக சார்பில் போட்டியிடும் தமிழக முதல்வர் ஜெயலலிதா 113 கோடி ரூபாய்க்கு தன்னிடம் சொத்து இருப்பதாக பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் 64 கோடி ரூபாய் சொத்துகளுடன் கோடீஸ்வரர் வேட்பாளர் பட்டியலில் ஐந்தாம் இடம் பெற்றுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி 62 கோடி ரூபாய் சொத்துக்களுடன் 6-ம் இடத்திலும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் 53 கோடி ரூபாய் சொத்துக்களுடன் 9-ம் இடத்திலும் உள்ளனர்.

மேலும், தமிழக தேர்தல் களத்தில் 553 கோடீஸ்வரர்கள் போட்டியிடுகின்றனர். கட்சிவாரியாக களத்தில் நிற்கும் கோடீஸ்வரர்கள் விவரம்:

  • அதிமுக - 217
  • திமுக - 133
  • பாமக - 72
  • தேமுதிக - 58
  • பாஜக - 64
  • காங்கிரஸ் - 32

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments