மோடி ஒரு ஒழுங்கற்ற மாணவர்: மோடியின் கல்வி தகுதி குறித்து தொடரும் பல சர்ச்சைகள்!

Report Print Basu in இந்தியா
மோடி ஒரு ஒழுங்கற்ற மாணவர்: மோடியின் கல்வி தகுதி குறித்து தொடரும் பல சர்ச்சைகள்!
246Shares
246Shares
lankasrimarket.com

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தில்லிப் பல்லைக் கழகத்தில் பி.ஏ படித்தார் என்றும், குஜராத் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ படித்தார் என்றும் பாஜகவின் தலைவர் அமித் ஷா தில்லியில் செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்து மோடியின் சான்றிதழை வெளியிட்டார்.

இதை தொடர்ந்து பல சர்ச்சைகள் கிளம்பியது, 1980களில் எல்லாம் கைகளால் மதிப்பெண்கள் நிரப்பப்பட்ட சான்றிதழ்கள் தான் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

மோடி மட்டும் கணினியால் தயார் செய்யப்பட்ட சான்றிதழைப் பெற்றிருப்பது எப்படி என பல ஆர்வலர்கள் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்

இந்நிலையில், 1969 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு குஐராத் பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறை பேராசிரியராக பணியாற்றிய ஜெயந்திபாய் பட்டேல், மோடியின் சான்றிதழ் மீது தனக்கு சந்தேகம் உள்ளதாக கூறி மேலும் ஒரு புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

மோடி சான்றிதலில் குறிப்பிட்டுள்ள படங்களை, அந்த நேரத்தில பல்கலைக் கழகம் வழங்கவில்லை என கூறியுள்ளார்.

மேலும், மோடியின் எம்.ஏ முதுகலை சான்றிதழ்களில் பல முரண்பாடுகள் காணப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், கல்லூரிகாலங்களில் மோடி ஒரு ஒழுங்கற்ற மாணவர், அவரின் வருகை பதிவு மிகவும் மோசமாக இருந்தது.

எங்கள் வகுப்பில் பல்வேறு சமூக பிரச்சனைகள் குறித்து விவாதங்கள் நடத்தப்படும், ஆனால், மோடி இதுவரை பங்கேற்றதில்லை என அவர் குறைகூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments