தலைவர்களுக்கு இன்று மரியாதை செலுத்துகிறார் ஜெயலலிதா!

Report Print Deepthi Deepthi in இந்தியா
தலைவர்களுக்கு இன்று மரியாதை செலுத்துகிறார் ஜெயலலிதா!
376Shares
376Shares
ibctamil.com

சட்டமன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து, பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. முதல்-அமைச்சராக மீண்டும் ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெறும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அவர் முதல்-அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

முன்னதாக, முதல்-அமைச்சர் ஜெயலலிதா, பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு இன்று மதியம் 2 மணிக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.

இது தொடர்பாக, அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தலில், அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெற்றுள்ளதையொட்டி 20-5-2016 வெள்ளிக்கிழமை (இன்று) பிற்பகல் 2 மணி அளவில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா, சென்னை அண்ணாசாலை, அண்ணா மேம்பாலம் அருகில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் உருவச்சிலைக்கும், அண்ணா சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் உருவச் சிலைக்கும், ஸ்பென்சர் அருகே அமைந்துள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் உருவச் சிலைக்கும் மரியாதை செலுத்த உள்ளார் என கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments