ஜெயலலிதாவுக்காக விரலை வெட்டி காணிக்கை செலுத்திய அதிமுக தொண்டர்!

Report Print Jubilee Jubilee in இந்தியா
ஜெயலலிதாவுக்காக விரலை வெட்டி காணிக்கை செலுத்திய அதிமுக தொண்டர்!
677Shares
677Shares
ibctamil.com

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஜெயலலிதா முதல்வரானதைத் தொடர்ந்து அதிமுக தொண்டர் ஒருவர் தனது விரலை வெட்டி காணிக்கை செலுத்தியுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள ஆண்டகலூர் கேட்டில் தங்கராஜ் (50) என்பவர் வசித்து வருகிறார்.

தீவிர அதிமுக தொண்டரான இவர் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஜெயலலிதா ஆட்சியமைத்தால் தனது விரலை வெட்டி உண்டியலில் காணிக்கை செலுத்துவதாக அங்குள்ள பிரசித்தி பெற்ற முனியப்பன் கோவிலில் வேண்டுதல் வைத்துள்ளார்.

இந்த நிலையில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்கவுள்ளதை அறிந்த தங்கராஜ், தனது வேண்டுதல் படி இன்று ராசிபுரம் முனியப்பன் கோவிலில் தனது இடது கை சுண்டு விரலை வெட்டிக்கொண்டார்.

இதில் துண்டான தங்கராஜின் விரல் கையில் இருந்து விழாமல் தொங்கியவாறு இருந்துள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவருடன் வந்த ராஜா என்பவர் தங்கராஜை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். தற்போது அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments