மரணத்தில் முடிந்த காதல்: எதற்காக?

Report Print Deepthi Deepthi in இந்தியா

திருச்சியில் வயது குறைவு காரணமாக பெற்றோர் தங்களை சேர்த்து வைக்கமாட்டார்கள் என எண்ணிய காதல் ஜோடியினர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான இம்ரான்(19), திவ்யா(21) ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் தங்கள் காதலை வீட்டில் தெரியப்படுத்தி, திருமணம் செய்துவைக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர், ஆனால், திவ்யாவைவிட இம்ரானுக்கு 2 வயது குறைவு என்பதால் இருவர் வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய இந்த காதல் ஜோடி, பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்துவிட்டு, விஷம் அருந்தி நடுரோட்டில் மயங்கி கிடந்துள்ளனர்.

இதனைப்பார்த்த அருகில் இருப்பவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர், இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தற்போது, இந்த தகவல் இவர்களது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது, பொலிசார் விசாரணை மேற்கொண்டதில், வயது வித்தியாசத்தால் பெற்றோர் தங்களுக்கு திருமணம் செய்து வைக்கமாட்டார்கள் என எண்ணிய காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments