செல்ஃபி ஆசையால் நடந்த விபரீதம்: அடுத்தடுத்து கங்கையில் மூழ்கி 7 பேர் பலி!

Report Print Jubilee Jubilee in இந்தியா
செல்ஃபி ஆசையால் நடந்த விபரீதம்: அடுத்தடுத்து கங்கையில் மூழ்கி 7 பேர் பலி!

செல்ஃபி எடுக்கும் ஆசையில் கங்கை நதியில் அடுத்தடுத்து 7 நண்பர்கள் மூழ்கி பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் கலோனல் கஞ்ச் பகுதியைசேர்ந்த சிவம். இவர் தனது 6 நண்பர்களான சச்சின் குப்தா, போலு திவாரி, ரோஹித், மக்சூத், போலா, சத்யம், ஆகியோருடன் நேற்று கங்கை நதியில் குளிக்கச் சென்றார்.

சமீபத்தில் பெய்த மழையால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் சிவம் ஆற்றின் நீரோட்டம் அதிகம் உள்ள பகுதிக்கு சென்று செல்ஃபி எடுக்க முயற்சித்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் நீரின் வேகம் அதிகரித்ததால் அவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். அவரது அலறல் குரல் கேட்டு அவரது நண்பர் மக்சூத் அவரை காப்பாற்ற முயன்றார்.

ஆனால் அவரும் நீரில் அடித்து செல்லப்பட்டார். இப்படி ஒவ்வொருவராக 7 நண்பர்களும் ஆற்றிற்கு இரையாகினர்.

இதன் பின்னர் அந்த பகுதியில் இருந்தவர்கள் தகவல் கொடுக்க, நீர்மூழ்கி வீரர்கள் உதவியுடன் 7 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன.

செல்ஃபி மோகத்தால் 7 நண்பர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா விலகுமா? நேரடி பதிவுகள்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments