நான் நலமுடன் இருக்கிறேன்! தீயாய் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்ட சரத்குமார்

Report Print Deepthi Deepthi in இந்தியா
775Shares

ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவினை பேஸ்புக்கில் வெளியிட்டு, நான் நலமுடன் இருக்கிறேன் என்ற தகவலையும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமாருக்கு நேற்று திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுதொடர்பான செய்தி சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது, இந்நிலையில் இன்று ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொள்வது போன்ற புகைப்படத்தினை வெளியிட்ட சரத்குமார், நான் நலமுடன் இருக்கிறேன், எனது ஆரோக்கியம் குறித்து சில விஷமம் நிறைந்த கருத்துக்கள் நேற்று சமூகவலைதளங்களில் வெளியாகின.

மேலும், எனது உடல்நலனில் அக்கறை எடுத்துக்கொண்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments