சுவாதி கொலை வழக்கு: திக் திக் நிமிடங்கள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ராம்குமாரை பிடிப்பதற்காக சென்னை பொலிசார் செங்கோட்டை விரைந்த போது நடந்த திக் திக் நிமிடங்கள் இதோ,

 • 1 ஆம் திகதி இரவு 11 மணிக்கு செங்கோட்டை அருகே டி.மீனாட்சிபுரத்தில் உள்ள ராம்குமார் வீட்டை பொலிசார் சுற்றிவளைத்தனர்.

 • 11.30 மணிக்கு அவரது வீட்டை தட்டினர். வந்துள்ளது பொலிசார் என்பதை அறிந்து கொண்ட ராம்குமார் பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

 • 11.45 மணிக்கு ராம்குமாருடன் தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் பொலிசார் தென்காசி அரசு மருத்துவமனைக்கு விரைந்தனர்.

 • 12.10 மணிக்கு தற்கொலைக்கு முயன்ற ராம்குமாரை பொலிசார் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

 • அங்கு மருத்துவர் குழுவினர் 30 நிமிடங்கள் ராம்குமாருக்கு முதலுதவி அளித்து அவரது கழுத்தில் 18 தையல்கள் போட்டனர்.

 • 12.50 மணிக்கு முதலுதவி முடிந்து ராம்குமாருடன் பொலிசார் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தனி அவசரஊர்தியில் புறப்பட்டனர்.

 • ராம்குமார் நெல்லை வருவதை அடுத்து அதிகாலை 1 மணிக்கு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பொலிசார் குவிக்கப்பட்டனர். தகவலறிந்து பத்திரிகையாளர்களும், தொலைக்காட்சி செய்தியாளர்களும் மருத்துவமனையில் குவிந்தனர்.

 • அதிகாலை 1.40 மணிக்கு அவசரஊர்தி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வந்தது. ராம்குமாரை பத்திரிகையாளர்கள் படம் எடுக்க விடாமல் பொலிசார் அவரது முகத்தை மூடியிருந்தனர். அவரது தந்தை, தாய், 2 சகோதரிகளும் உடன் அழைத்து வரப்பட்டனர்.

 • 1.50மணிக்கு ராம்குமார் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

 • 1.55 மணிக்கு பொலிஸ் வாகனங்கள் அரசு மருத்துவமனைக்கு வருவதும், செல்வதுமாக இருந்தன. உளவுத்துறையினரும் அரசு மருத்துவமனையில் குவிந்தனர்.

 • 2.00மணிக்கு மருத்துவர்கள் ராம்குமாரின் உடல் நிலை குறித்து பரிசோதனை நடத்தினர்.

 • 2.30 மணிக்கு ராம்குமாரின் கழுத்து பகுதியை எக்ஸ்ரே எடுப்பதற்காக அந்த அறைக்கு கொண்டு சென்றனர்.

 • 3.00 மணிக்கு கழுத்தில் சிறிய அறுவை சிகிச்சை நடந்தது.

 • 4.00 மணிக்கு ராம்குமார் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

 • 5.30மணிக்கு ராம்குமார் உடல் நிலை குறித்து மருத்துவர்கள் பரிசோதித்தனர்.

 • காலை 6.00 மணிக்கு சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள் மருத்துவமனை முன்பு திரண்டனர்.

 • 6.30 மணிக்கு ராம்குமாரை பார்க்க அவரது தாய், தங்கைக்கு மட்டும் அனுமதி.

 • 9.30 மணிக்கு மருத்துவமனை வளாகத்தில் வெளி மாநில பத்திரிகையாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் குவிந்தனர்.

 • 11.00 மணிக்கு சென்னையில் இருந்து நுங்கம்பாக்கம் தனிப்படை பொலிசார் விசாரணைக்காக வருவதாக வந்த தகவலையடுத்து பரபரப்பு நிலவியது.

 • 12.45 மணிக்கு பத்திரிகையாளர்களிடம் ராம்குமார் உடல் நிலை குறித்து டீன் சித்தி அத்திய முனவரா விளக்கினார்.

 • மதியம் 1.10 மணிக்கு மாவட்ட பொலிஸ் சூப்பிரெண்டு விக்ரமன், நுங்கம்பாக்கம் பொலிஸ் உதவி கமிஷனர் தேவராஜன் மற்றும் அவருடன் வந்த 7 தனிப்படை பொலிசார் 3 வாகனங்களில் மருத்துவமனைக்கு வந்தனர். டீனுடன் அவர்கள் 10 நிமிடம் பேசினர்.

 • 1.30மணி பொலிஸ் சூப்பிரெண்டு விக்ரமன், உதவி கமிஷனர் தேவராஜன் ஆகியோர் ராம்குமார் அனுமதிக்கப்பட்டுள்ள அறைக்கு சென்றனர். அப்பகுதியில் வேறு யாரையும் அனுமதிக்கவில்லை. அவரது உடல் நிலையை மருத்துவ கண்காணிப்பாளர், மருத்துவர் இளங்கோவன் செல்லப்பா மற்றும் பிற மருத்துவர்களிடம் விசாரித்தனர்.

 • 2.00 மணி ராம்குமார் அனுமதிக்கப்பட்டிருந்த அறை பகுதிக்கு பத்திரிகையாளர்கள் செல்ல முயன்றனர். ஆனால் பொலிசார் அனுமதி மறுத்துவிட்டனர்.

 • மாலை கடந்த பின்னரும் தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு ஒரு முறை ராம்குமாரின் உடல் நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து டீன் கேட்டறிந்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments