சுவாதியுடன் பழக முடியாத விரக்தியால் நடந்த படுகொலை: மாநகர காவல் ஆணையர் தகவல்

Report Print Deepthi Deepthi in இந்தியா
சுவாதியுடன் பழக முடியாத விரக்தியால் நடந்த படுகொலை: மாநகர காவல் ஆணையர் தகவல்

சுவாதியுடன் பழக முடியாத விரக்தியில்தான் அவரை ராம்குமார் வெட்டி படுகொலை செய்தார் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் கூறியுள்ளார்.

சுவாதி கொலைக்கு ஒருதலைக்காதல் தான் காரணம் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்ற நிலையில், மாநகர காவல் ஆணையர் கூறியதாவது, சுவாதி வேலைக்குச் செல்லும்போதும், வேலை முடிந்து வீடு திரும்பும்போதும் ராம்குமார் அவரை பின்தொடர்ந்துள்ளார்.

அவருடன் பழக வேண்டும் என்று நினைத்திருக்கிறார். ஆனால், அதற்கான வாய்ப்பு இல்லாமல் இருந்திருக்கிறது. இதில் விரக்தி அடைந்து, சுவாதியை கொலை செய்துள்ளார். இருப்பினும் விசாரணைக்கு பிறகே முழு விவரம் தெரியும்.

மேலும், ராம்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் பரிந்துரைப்படிதான் அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

அதன்பின்னரே, முழு விபரங்கள் தெரியவரும் என கூறியுள்ளார்.

வீடியோவை காண

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments