அன்று மதமாற்றத்தால்...இன்று சுவாதி படுகொலையால்: பட்டி தொட்டியெங்கும் பிரபலமான மீனாட்சிபுரம்

Report Print Deepthi Deepthi in இந்தியா
அன்று மதமாற்றத்தால்...இன்று சுவாதி படுகொலையால்: பட்டி தொட்டியெங்கும் பிரபலமான மீனாட்சிபுரம்

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள மீனாட்சிபுரம் கிராமம் 35 ஆண்டுகளுக்கு பின்னர் சுவாதி கொலையின் மூலம் நாட்டின் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சிறிய கிராமத்தில் 300 குடும்பங்களே வசித்து வருகின்றனர், தீண்டாமை, மேல் வர்க்கத்தின் அடக்குமுறை காரணங்களால் 1981 ஆம் ஆண்டு இக்கிராமத்தில் உள்ள 210 குடும்பத்தினர் இஸ்லாம் மதத்திற்கு மாறினர்.

இவர்களின் மதமாற்றம் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாஜக தேசிய தலைவராக இருந்த வாஜ்பாய் உள்ளிட்டோர்கள் நேரிடையாக இக்கிராமத்திற்கு வந்து மக்களை சந்தித்து பேசினர்.

தற்போது, 33 ஆண்டுகளுக்கு பிறகு சுவாதி கொலை வழக்கால் இக்கிராமம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது, ஏனெனில் சுவாதி கொலைகுற்றவாளி ராம்குமாரின் சொந்த ஊர் இதுவாகும்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, மதமாற்றம் சம்பவத்தால் பிரபலமான எங்கள் கிராமம், தற்போது சுவாதி கொலையால் இந்தியா முழுவதும் பேசப்படுவது மிகுந்த தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

ராம்குமார் செய்த இச்செயலால் எங்களுக்கு மிகுந்த அவமானம் நேர்ந்துவிட்டது என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments