கோயில் தேரோட்டத்தில் குண்டு வெடிக்கும்: மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு

Report Print Arbin Arbin in இந்தியா
கோயில் தேரோட்டத்தில் குண்டு வெடிக்கும்: மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டத்தின்போது வெடிகுண்டு வெடிக்க வாய்ப்பு இருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூரத் தேரோட்டம் ஆகஸ்டு 5-ம் திகதி நடைபெறவுள்ளது. இதையொட்டி வெள்ளிக்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து அஞ்சல் செய்யப்பட்ட ஒரு தபால் வந்துள்ளது.

அதில் தேரோட்டத்தின்போது வெடிகுண்டு வெடிக்க வாய்ப்பு உள்ளது. தேரோட்டத்திற்கு வரும் அனைவரையும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும். அதிகமான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் பொறுப்பு வகிக்கும் சங்கரேஸ்வரன் கூறுகையில், கடிதம் வந்துள்ளது உண்மைதான். மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் உத்தரவுப்படி ஆண்டாள் கோவிலில் இரு மடங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடுமையான சோதனைகளுக்குப் பின்னரே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்றார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments