9 வயது சிறுமி கவலைக்கிடம்: மது போதையில் வாகனம் ஓட்டிய மாணவர்களால் விபரீதம்

Report Print Arbin Arbin in இந்தியா
9 வயது சிறுமி கவலைக்கிடம்: மது போதையில் வாகனம் ஓட்டிய மாணவர்களால் விபரீதம்

ஐதராபாத்தில் மாணவர்கள் சிலர் மது போதையில் வாகனம் ஓட்டி எதிரே வந்த கார் மீது மோதியதில் 9 வயது சிறுமி பலத்த காயமடைந்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மாணவர்கள் சிலர் மது அருந்திவிட்டு அதி வேகமாக வாகனத்தை செலுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் பஞ்சிரா ஹில்ஸ் பகுதியில் எதிரே வந்த வாகனத்தை முன்னேறி செல்கையில் சாலையில் அமைத்திருந்த தடுப்பில் மோதி எதிரே வந்த இன்னொரு கார் மீது வேகமாக மோதியுள்ளது.

இந்த விபத்தில் அந்த வாகனத்தை ஓட்டி வந்த ராஜேஷ் என்பவர் சம்பவயிடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். மேலும் அந்த வாகனத்தில் வந்த ரம்யா என்ற 9 வயது சிறுமி தலையில் பலத்த காயமுடன் மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ளார்.

அதே வாகனத்தில் பயணித்த ரம்யாவின் தாயார் மற்றும் உறவினர் இருவருக்கும் பலத்த காயமேற்பட்டுள்ளது. அனைவரையும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.

விபத்துக்கு காரணமான மாணவர்கள் 6 பேர் திரைப்படத்திற்கு சென்றுள்ளதாகவும், அங்கு காட்சியை தவறவிட்டதை அடுத்து, அடுத்துள்ள மதுபானக்கடையில் மது அருந்திவிட்டு புறப்பட்டுள்ளனர்.

இதனிடையே வாகனத்தை ஓட்டி வந்த 20 வயதான ஷ்ராவில் மீது கொலை வழக்கு பதிந்துள்ளனர். வாகனத்தை ஓட்டி வந்தவருக்கு ஓட்டுனர் உரிமம் இல்லை எனவும், விபத்துக்குள்ளான அந்த வாகனம் அவரது நண்பர் ஒருவரது உறவினருக்கு சொந்தமானது எனவும் கூறப்படுகிறது.

இதேப்போன்று சென்னையில் மது போதையில் வாகனம் ஓட்டிய பெண் ஒருவரால் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் நேற்று நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments