சுவாதிக்கும், பிலாலுக்கும் இடையில் இருக்கும் கல்லூரி மர்மம்

Report Print Kalam Kalam in இந்தியா
சுவாதிக்கும், பிலாலுக்கும் இடையில் இருக்கும் கல்லூரி மர்மம்

தமிழ்நாட்டை கடந்த ஒரு வாரமாக பரபரப்பாக்கிய சுவாதி கொலை வழக்கு குற்றவாளி ஒருவழியாக கண்டுபிடிக்கப்பட்டார்.

இவர் தனது கழுத்தை அறுக்க முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் யாரென்று தெரியவருவதற்கு முன்பாக சுவாதியின் நண்பர் பிலால் மாலிக் என்பவரிடம் தீவிர விசாரணை நடைபெற்றது.

ராம்குமார் பிடிபட்ட பின்பு பிலால் பத்திரிக்கையாளர்களிடமும் பேசத்தொடங்கினார். அவர் பேசுகையில் சுவாதி அனைவரிடமும் பழகக்கூடியவர் அல்ல, நெருங்கிய நண்பர்களிடம் மட்டுமே பழகுவார் என்றும் ராம்குமாரை நான் பார்த்ததில்லை எனவும் கூறினார்.

மேலும் அவரிடம், இருவரும் ஒரே கல்லூரியா என்ற கேட்டபோது அதைப்பற்றி பேச மறுத்து நகர முற்பட்டார். இருவரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பழக்கம் என்று மட்டும் கூறி பேச்சை முடித்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments