சென்னைக்கு கொண்டு வரப்பட்ட ராம்குமார்: பலத்த பொலிஸ் பாதுகாப்பு

Report Print Fathima Fathima in இந்தியா
சென்னைக்கு கொண்டு வரப்பட்ட ராம்குமார்: பலத்த பொலிஸ் பாதுகாப்பு

தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சுவாதி கொலைக் குற்றவாளி ராம்குமாருக்கு தற்போது ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் 24ம் திகதி காலை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் என்பவரை பொலிசார் கைது செய்தனர்.

இவரை கைது செய்ய பொலிசார் சென்ற போது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றான்.

தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, கழுத்து 18 தையல் போடப்பட்டுள்ளது.

நேற்று தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மற்றொரு அறைக்கு மாற்றிய நிலையில், நெல்லை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராமதாஸ் முன்னிலையில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தான்.

இதனையடுத்து ராம்குமாரை சென்னைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் செய்யப்பட்டது, தொடர்ந்து 108 ஆம்புலன்சில் காது, மூக்கு, தொண்டை மருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர்கள் அடங்கிய மருத்துவ குழுவுடன் பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு கொண்டு வரபட்டான்.

இங்கு ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments