குற்றம் நிரூபிக்கப்பட்டால் ராம்குமாருக்கு என்ன தண்டனை கிடைக்கும்?

Report Print Deepthi Deepthi in இந்தியா
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ராம்குமாருக்கு என்ன தண்டனை கிடைக்கும்?

சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை கொண்டுவரப்பட்டுள்ள ராம்குமாரிடம் இன்று விசாரணை நடைபெறவிருக்கிறது, இதன் அடிப்படையில் நடைபெறும் வழக்கில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் என்ன தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என்பது குறித்து சட்டநிபுணர் அஜிதா தனியார் தொலைகாட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,

இந்த வழக்கில், குற்றவாளியாக கருதப்படும் நபர் கிடைத்துள்ளார். அவருக்கே ஏற்பட்ட ஒரு தலைக் காதலால் கொலை செய்தாரா? அல்லது வேறு யாருக்காகவும் கொலை செய்துள்ளாரா? குற்றவாளிக்கு வேறு யாரேனும் உதவி செய்துள்ளனரா? ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனரா? என்பதெல்லாம் முழுமையான புலன் விசாரணைக்கு பிறகுதான் தெரிய வரும்.

அதற்கு பிறகு சார்ஜ் சீட் தாக்கல் செய்யப்படும் இப்போது மாவட்டந்தோறும் மகிளா நீதிமன்றங்கள் உள்ளன. சென்னையிலும் மகிளா நீதிமன்றம் உள்ளது.

மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கினை விரைவாகவும் துரிதமாகவும் நடத்த வாய்ப்புள்ளது. ஒரு மாதத்திற்குள்ளோ இரு மாதத்திற்குள்ளோ தீர்ப்பு வழங்க வாய்ப்புள்ள ஒரு வழக்குதான் இது.

பொதுமக்களை மிகவும் பாதிக்க வைத்த கொலை சம்பவம் அனைவர் கவனமும் இந்த வழக்கின் மீது இருக்கிறது. இவர்தான் குற்றவாளியென உறுதி செய்யப்பட்டால், மரணதண்டனை வரை வழங்க வாய்ப்புள்ளது இந்த கொலை பணத்திற்காகவோ அல்லது பாலியல் வன்முறையுடன் சேர்ந்து செய்ப்படவில்லை.

அதனால் மரணதண்டனை அளிக்கும் வாய்ப்பு இருந்தாலும் ஆயுள் தண்டனையாக குறைத்து வழங்கப்படலாம். காதல் அல்லது ஒரு தலைக்காதலால் கொலை செய்யப்பட்டிருப்பதால், ஆயுள் தண்டனையோ அல்லது இரட்டை ஆயுள் தண்டனையோ வழங்க வாய்ப்புள்ளதது என்றார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments