சுவாதியை எப்படி கொலை செய்தாய்? ராம்குமாரை நடித்து வைத்து காட்ட பொலிஸ் திட்டம்

Report Print Deepthi Deepthi in இந்தியா
சுவாதியை எப்படி கொலை  செய்தாய்? ராம்குமாரை நடித்து வைத்து காட்ட பொலிஸ் திட்டம்

ராம்குமார் தற்போது ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் (கைதிகளுக்குரிய வார்டில்) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு மருத்துவர் மயில்வாகனம் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து தற்போது தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிகிச்சை முடிவுகள் காலை 9 மணி அளவில் பொலிசாருக்கு அளிக்கப்பட உள்ளதாகவும், மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால், கைதிகள் வார்ட் உட்பட, மருத்துவமனையைச் சுற்றிலும் பொலிசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில், ராம்குமாரின் உடல்நிலை சரியான உடன், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதியை கொலை செய்தது எப்படி என, ராம்குமாரை நடித்துக் காட்ட வைக்க பொலிசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி, ராம்குமாரிடம் விசாரணை நடத்த உள்ளார். அதனைத் தொடர்ந்து, ராம்குமாரை பொலிஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments