உன்னை முதுகில் குத்துவார்கள்: கலாபவன் மணியை எச்சரித்த சாமியார்

Report Print Deepthi Deepthi in இந்தியா
உன்னை முதுகில் குத்துவார்கள்: கலாபவன் மணியை எச்சரித்த சாமியார்

மலையாள நடிகர் கலாபவன் மணி மரணம் தொடர்பான தகவல்கள் அவ்வப்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், தற்பாது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

கலாபவன் மணியின் தம்பி ராமகிருஷ்ணன், தனது அண்ணன் தொடர்பான மரணத்தில், ஜபார் இடுக்கி மற்றும் சாபுமோன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி வருகிறார்.

இதற்கிடையில், கலாபவன் மணியின் வீட்டில் நடைபெற்ற பூஜை ஒன்றில் கலந்துகொண்ட சாமியார், அவரது கையை பிடித்துக்கொண்டு உனக்கு நெருக்கமானவர்கள் உன்னை முதுகில் குத்துவார்கள், அதனால் கவனமாக நடந்துகொள் என கூறுகிறார், இதற்கு கலாபவன் மணி சரிங்க சாமி என்று கூறுகிறார்.

தற்போது இந்த பூஜை தொடர்பான வீடியோ வெளியாகி கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments