ராம்குமார் வீட்டில் சில முக்கிய தடயங்கள்!

Report Print Deepthi Deepthi in இந்தியா
ராம்குமார் வீட்டில் சில முக்கிய தடயங்கள்!

சுவாதி கொலைகுற்றவாளி ராம்குமாரை வீட்டினை பொலிசார் சோனையிட்டதில் சில தடயங்கள் கிடைத்துள்ளன.

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே மீனாட்சிபுரம் அம்பேத்கர் நகரில் உள்ள ராம்குமாரின் வீட்டில் தனிப்படை பொலிசார் நேற்று சோதனை நடத்தினர்.

சோதனை நடத்தியதில் முக்கிய தடயங்கள் சிக்கியதாக தெரிகிறது.

வீட்டுக்குள் இருந்த செல்போன் கைப்பற்றப்பட்டது. இதேபோல், ராம்குமார் சில தாள்களில் எழுதி வைத்திருந்த குறிப்புகளும், சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு பயணம் செய்த டிக்கெட் உள்ளிட்டவைகளும் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.

வீட்டைச் சுற்றிலும் இன்ஸ்பெக்டர் பிரதாபன் தலைமையில் 10-க் கும் மேற்பட்ட பொலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments