570 கோடி பறிமுதல் வழக்கு சி.பி.ஐ பிடியில்! உண்மை வெளிச்சத்திற்கு வருமா?

Report Print Basu in இந்தியா
570 கோடி பறிமுதல் வழக்கு சி.பி.ஐ பிடியில்! உண்மை வெளிச்சத்திற்கு வருமா?

தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது கண்டெய்னர் லாரிகளில் பறிமுதல் செல்லப்பட்ட 570 கோடி ரூபாய் தொடர்பான வழக்கின் விசாரணையை சி.பி.ஐ மேற்கொள்ள வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக உறுப்பினர் டி.கே.எஸ் இள்ங்கோவன் தொடுத்திருந்த இது தொடர்பான வழக்கில் இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 16ஆம் தேதி நடக்கவிருந்த நிலையில், மே 14ஆம் தேதியன்று திருப்பூர் மாவட்டத்தில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, மூன்று கண்டெய்னர் லாரிகளில் கட்டுக் கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பிறகு இந்தப் பணம் தங்களுக்குச் சொந்தமானது என கோயம்புத்தூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கூறியது. கோயம்புத்தூரில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு பணம் கொண்டுசெல்லப்படவிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்தப் பணம் தமிழகத்தைச் சேர்ந்த பெரிய அரசியல் கட்சி ஒன்றுக்குச் சொந்தமானது என சில கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.

இந்த நிலையில், இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டுமெனவும் கோரி தி.மு.கவின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் தான் இன்றைய தினம் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments