விஜயாந்த் முடிவு செய்ய வேண்டும்: வைகோ

Report Print Deepthi Deepthi in இந்தியா
விஜயாந்த் முடிவு செய்ய வேண்டும்: வைகோ

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியோடு சேர்ந்து போட்டியிட்ட தேமுதிக படு தோல்வியை சந்தித்தது.

இதனையடுத்து, மநகூட்டணியிலிருந்து தேமுதிக விலகப்போவதாக தகவல்கள் வெளியாகின, இதற்கிடையில் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று கேள்விகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,

வினுப்பிரியா தற்கொலை வழக்கில் குற்றவாளியை முதலில் கைது செய்திருந்தால் அவர் தற்கொலை செய்திருக்கமாட்டர் என்றும், தமிழ் நாட்டில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து செல்கின்றன எனவே இதை உடனடியாக தடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேலும், படிபடியாக மது விலக்கு என்பது வெறும் கண் துடைப்பு தானே தவிர ,பூரண மதுவிலக்கு என்பது உடனடியாக கொண்டுவர வேண்டும் என்றும் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நல கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments