ராம்குமாருக்கு இட்லி, இடியாப்பம் கொடுத்தோம்: ராயப்பேட்டை டீன் தகவல்

Report Print Deepthi Deepthi in இந்தியா
ராம்குமாருக்கு இட்லி, இடியாப்பம் கொடுத்தோம்: ராயப்பேட்டை டீன் தகவல்

சுவாதி கொலை குற்றவாளி ராம்குமாரின் உடல்நிலை குறித்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனை டீன் நாராயணபாபு தகவல் அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, ராம்குமார் உடல்நிலையை இன்று காலை மருத்துவர்கள் குழு பரிசோதித்தது. அவரது உடல்நிலை நன்றாக உள்ளது. எந்த பிரச்சினையும் இல்லை. இருப்பினும், 7 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது

நெல்லையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போது திரவ உணவு அளித்துள்ளனர். ஆனால் இன்று திட உணவு கொடுத்து சாப்பிட முடிகிறதா என சோதித்து பார்க்கப்பட்டது.

அதன்படி, இன்று காலை ராம்குமாருக்கு இட்லி மற்றும் இடியாப்பம் வழங்கப்பட்டது. சாப்பிடுவதில் எந்த பிரச்சினையும் இல்லை என தெரிந்தது.

தையலை எப்போது பிரிப்பது என்பது பற்றி இன்னும் முடிவு செய்ய வில்லை. ராம்குமார் உடல் நிலையில் தொடர்ந்து நல்ல முன்னேற்றமாக இருந்தால் விரைவில் கழுத்தில் போடப்பட்டுள்ள தையல் பிரிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments