சிறுவர்களை குறிவைக்கும் கஞ்சா சொக்லேட்

Report Print Deepthi Deepthi in இந்தியா

சென்னை மாநகராட்சி பள்ளி அருகே உள்ளே பெட்டி கடையில் கஞ்சா சொக்லேட் வாங்கி சாப்பிட்ட மாணவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தண்டையார் பேட்டையில் உள்ள பெட்டி கடையில் கஞ்சா சொக்லேட் வாங்கி சாப்பிட்டதில் படேல் நகர பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் பரத் என்ற மாணவன் சுயநினைவை இழந்து எழும்பூர் குழந்தை நல மருத்துவமனையில் திவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான், மற்ற 4 பேரும் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பரதனின் உடல் நிலை குறித்து மருத்துவர் கூறியதாவது, அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து மாணவனுக்கு பல வித சிகிச்சை அளித்துள்ளோம்,ஆனால் அவரது உடல்நிலையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை என்றும் அவன் சாப்பிட்ட சொக்லேட் கிடைத்தால் தான், அப்பொருளின் தன்மை அறிந்து அதுக்கேற்றார் போல் சிகிச்சை அளிக்கமுடியும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து ராஜ செந்தூர் பாண்டியன் (சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்), இது போன்ற செயலில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கபடவேண்டும், அவர்கள் வெளிவரமுடியாத அளவுக்கு சட்டம் கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளார்.

மேற்கு வங்கம் மற்றும் பீஹார் மாநிலங்களில் பல ஆயிரம் பள்ளி மாணவர்களை அடிமையாக்கியுள்ள இந்த கஞ்சா சொக்லேட், சமீபத்தில் தான் சென்னைக்கு விற்பனைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த சொக்லேட் குடிசை பகுதி சிறுவர்களை குறிவைத்து விற்பனை செய்யப்படுவதாக பொலிஸ் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர், இந்த சொக்லேட்டில் மூலிகைகள் கலந்திருப்பதாக கூறப்பட்டாலும், அதனுள் கஞ்சாவும் கலக்கப்படுகிறது என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்போது பொலிசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments