கல்லூரி பேருந்தில் விபத்துக்குள்ளாகி மாணவி பலி: பொய் வழக்கு எழுதுவதாக பெற்றோர் புகார்

Report Print Basu in இந்தியா

சேலத்தில் கல்லூரி மாணவி ஒருவர் ஒடும் பேருந்திலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் கீரிப்பட்டியை சேர்ந்த பிரியதர்ஷினி (வயது-22) என்ற பெண் சேலம் AVS கல்லூரியில் BA ஆங்கில இலக்கியம் படித்து வருகிறார்.

இன்று காலை கல்லூரி பேருந்தில் பயணித்து கொண்டிருந்தபோது கல்லூரி பேருந்து வேகமாக பிரேக் போட்டதின் விளைவாக பேருந்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பிரியதர்ஷினி தடுமாறி கீழே விழுந்ததில் பேருந்தின் பின் பக்க கதவு திறந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளார்.

இதில் மாணவிக்கு தலையில் பலமான காயம் ஏற்ப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து அவர் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பிரியதர்ஷனி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். மாணவியின் உடல் சேலம் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

மாணவியின் பெற்றோர் அளித்துள்ள தகவலில், காதல் தோல்வியில் மாணவி கீழே விழுந்து தற்கொலை என பொலிசார் பொய்யாக வழக்கை மாற்றி எழுதுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments