விஜயகாந்த்துக்கு செக் வைக்கும் யூலை 17

Report Print Fathima Fathima in இந்தியா
விஜயகாந்த்துக்கு செக் வைக்கும் யூலை 17

மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்த் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சந்திரகுமார், பார்த்திபன், சேகர் ஆகியோர் இணைந்து மக்கள் தேமுதிக கட்சியை தொடங்கினர்.

சட்டசபை தேர்தலில் திமுக-வுடன் இணைந்து போட்டியிட்டு, மூவரும் தோல்வியை சந்தித்தனர்.

தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து திமுக-வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்நிலையில் சேலம் கோட் டை மைதானத்தில் நடைபெறவுள்ள பிரமாண்ட கூட்டத்தில் தேமுதிக தலைவரை தவிர மாபெரும் திரளான தொண்டர்கள் திமுகவில் இணைவார்கள் என சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இதற்காக தமிழகம் முழுவதும் தொண்டர்களை சந்தித்து பேசி வருகிறார் சந்திரகுமார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தேர்தல் நேரத்தில் பல தேமுதிக நிர்வாகிகள் தொடர்பு கொண்டு என்னிடம் பேசினர், இவர்களை சந்தித்து வருகிறோம்.

ஏராளமான ஒன்றிய செயலாளர்கள், கிளைக் கழக செயலாளர்கள், பெருவாரியான தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கின்றனர்.

வருகிற 17ம் திகதி சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெறவுள்ள பிரமாண்டமாக இணைப்பு விழாவில் விஜயகாந்தை தவிர அனைவரும் திமுக பக்கம் வருவார்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments