ராம்குமாருக்கு 7 ஆண்டுகள் சிறை?

Report Print Deepthi Deepthi in இந்தியா
ராம்குமாருக்கு 7 ஆண்டுகள் சிறை?

சுவாதி கொலை குற்றவாளி ராம்குமார் மீதான தண்டனை உறுதிசெய்யப்படும் பட்சத்தில் அவருக்கு 3 முதல் 7 ஆண்டுகள் தண்டனை கிடைப்பது உறுதி என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராம்குமாரிடம், மாஜிஸ்திரேட் கோபிநாத் முன்னிலையில், நுங்கம்பாக்கம் பொலிசார் நேற்று அவனை ஆஜர் படுத்தினர். அவனிடம் 20 நிமிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார்.

ராம்குமார் மீது நுங்கம்பாக்கம் பொலிசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். செங்கோட்டை பொலிசார், ஐ.பி.சி., 309 கீழ் அவன் மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை பொலிசாரின் விசாரணை முடிந்த பின், செங்கோட்டை அழைத்து வரப்படும் அவன், மீண்டும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவான். இதன் மூலம் கொலை வழக்கில் அவனுக்கு கிடைக்கும் தண்டனையுடன், தற்கொலை முயற்சி வழக்கில் கூடுதலாக 3 முதல் 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைப்பது உறுதி என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments