ஆசிரியை தாக்கியதில் கண்பார்வையை இழந்த மாணவி: ரூ.8 லட்சம் இழப்பீடு

Report Print Deepthi Deepthi in இந்தியா
ஆசிரியை தாக்கியதில் கண்பார்வையை இழந்த மாணவி: ரூ.8 லட்சம் இழப்பீடு

ஆசிரியை தாக்கியதில் பார்வை இழந்த மாணவிக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் வெங்கடேஷ்வரி, மதுரை நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட மனுவில், எனது மகளை ஆசிரியை பிரம்பால் அடித்ததில், அவளுக்கு கண்பார்வையை இழந்துவிட்டார்.

இதனால், ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரியுள்ளார், இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி, ஆவணங்களை வைத்து பார்க்கையில், ஆசிரியையின் மனிதாபிமானமற்ற செயலால் மாணவிக்கு கண்பார்வை பறிபோயுள்ளது.

ஆனால், இந்த தவறுக்கு பள்ளி நிர்வாகம் ஒத்துபோயுள்ளது, எனவே பள்ளி நிர்வாக தரப்பில் 12 சதவிகித வட்டியுடன் ரூ.7 லட்சத்தை 2 மாதத்திற்குள் இழப்பீடாக வழங்க வேண்டும்.

மேலும், இந்த வழக்கில் மாவட்ட அதிகாரியாக பணியாற்றிய பத்மாவதி, தவறான வாக்குமூலத்தை அளித்த குற்றத்திற்காக, அவர் ரூ.1 லட்சத்தை இழப்பீடாக மனுதாரருக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments