ராம்குமாரின் ரத்த மாதிரி மூலம் டிஎன்ஏ பரிசோதனை!

Report Print Deepthi Deepthi in இந்தியா
ராம்குமாரின் ரத்த மாதிரி மூலம் டிஎன்ஏ பரிசோதனை!

சுவாதி கொலை வழக்கில் சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் மிக முக்கியம் என்பதால் அவைகளை பொலிசார் தீவிரமாக சேகரித்து வருகின்றனர்.

இதனால், சுவாதியை கொலை செய்த ராம்குமார் பயன்படுத்திய அரிவாளில் படிந்திருந்த ரத்தம் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ளது, அதுமட்டுமின்றி ராம்குமாரின் சட்டையில் படிந்திருந்த ரத்த துளிகளும் சேகரிக்கப்பட்டுள்ளது.

இந்த ரத்த கறைகளை கொண்டு டி.என்.ஏ சோதனை செய்வதற்காக ஐதராபாத்தில் உள்ள சோதனை கூடத்துக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, இந்த கொலையில் டிஎன்ஏ சோதனை மிக முக்கிய சாட்சியாக கருதப்படுகிறது.

அதுமட்டுமின்றி தடயங்கள் மற்றும் சாட்சிகளை திரட்டுவதில் மிக முனைப்புடன் செயல்படும் பொலிசார், இவ்வாறு செய்தால் மட்டுமே மிக குறுகிய காலத்திற்குள் சுவாதி கொலை வழக்கினை நிறைவு செய்ய முடியும் என கருதுகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments