குடிகாரர்கள் வாகனங்களுக்கு தனி நம்பர் பிளேட் வேண்டும்: தலைவர் செல்லப்பாண்டியன் கோரிக்கை

Report Print Nithya Nithya in இந்தியா
குடிகாரர்கள் வாகனங்களுக்கு தனி நம்பர் பிளேட் வேண்டும்: தலைவர் செல்லப்பாண்டியன் கோரிக்கை

மது அருந்துவோர் பயணிக்கும் வாகனங்களுக்கு தனி நம்பர் பிளேட் வழங்க வேண்டும் என்று புதிய கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் செல்லப்பாண்டியன் தமிழக முதல்வரின் சிறப்புப் பிரிவு அலுவலகத்தில் ஒரு மனு அளித்துள்ளார். அதில், குடிபோதையில் வாகனம் ஓட்டுவோரால் விபத்துகள் நேரிடுகின்றன. குறிப்பாக குடிபோதையில் வாகனத்தை அதி வேகமாக ஓட்டிய தொழிலதிபர்களால் சென்னையில் கடந்த பிப்ரவரி 4ம் திகதி கெவின்ராஜ் என்பவரும், ஜூன் 4ம் திகதி மகேஷ்குமார் என்பவரும், ஜூலை 2ம் திகதி திருவான்மியூரில் முனுசாமி என்பவரும் உயிரிழந்துள்ளனர்.

இதுபோன்ற விபத்துக்களை எதிர்காலத்தில் தடுக்க குடிகாரர்கள் ஓட்டும் கார்கள், டூவீலர்களுக்கு தனி நம்பர் பிளேட் தர வேண்டும். தனி வண்ணத்தில், இந்த நம்பர் பிளேட்டுகள் இருந்தால் எதிரில் செல்வோர் கவனமுடன் செல்ல முடியும். எனவே இந்த புதிய நடைமுறையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செல்லப்பாண்டியன் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments