கலாச்சார சீர்கேடுதான் காரணம்: சுவாதி கொலை குறித்து மனநல மருத்துவர் காட்டம்

Report Print Arbin Arbin in இந்தியா
கலாச்சார சீர்கேடுதான் காரணம்: சுவாதி கொலை குறித்து மனநல மருத்துவர் காட்டம்

சென்னை மென்பொறியாளர் சுவாதி படுகொலை குறித்து கருத்து தெரிவித்துள்ள மனநல மருத்துவர், கலாச்சார சீர்கேடுதான் காரணம் என காட்டமாக தெரிவித்துள்ளார்.

மனநல மருத்துவரான லஷ்மி விஜயகுமார் சுவாதி படுகொலை சம்பவம் குறித்து தெரிவிக்கையில், ராம்குமார் தனிமையிலேயே இருந்து வந்ததாக செய்திகள் வருகின்றன. இத்தனை காலம் தனிமையிலேயே கழித்த அவர் சுவாதியை பார்த்தவுடன் தனக்கு துணை கிடைக்க போகின்றது என்று நினைத்திருக்கலாம்.

இதனால் தான், சுவாதி கிடைக்கவில்லை என்பதை ராம்குமாரால் ஏற்று கொள்ள முடியவில்லை. இதை தொடர்ந்து, காதல் என்பதில் இருந்து பழிவாங்கும் உணர்வு மேலோங்கியுள்ளது.

அதனால், தான் திட்டமிட்டு கொலை செய்துள்ளார். குற்றஉணர்வு இருந்தால் உடனடியாக தற்கொலை செய்து கொண்டிருப்பார். ஆனால், பொலிஸ் பிடிக்க வந்ததும்தான் தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதன் மூலம், தண்டனை கிடைக்குமோ என்ற பயத்தில் தான் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் என்பது தெளிவாகிறது.

இந்த சம்பவத்திற்கு பிறகு, ராம்குமாரின் அப்பா, அம்மா மற்றும் குடும்பத்தினர் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பார்கள். எனவே, அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்.

தேவைப்பட்டால் ராம்குமாருக்கும் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். தற்போது வெளியாகும் திரைப்படங்கள் பெண்களை ஒரு காட்சி பொருளாக சித்திரிப்பது உள்ளிட்ட கலாச்சார சீர்கேடுகள் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற ஒரு முக்கிய காரணமாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments