சோனியா காந்தி, ராகுலை சந்தித்த குஷ்பு: தலைவர் பதவியின் பின்னணியா?

Report Print Deepthi Deepthi in இந்தியா
சோனியா காந்தி, ராகுலை சந்தித்த குஷ்பு: தலைவர் பதவியின் பின்னணியா?
366Shares

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுகவோடு கூட்டணி வைத்த காங்கிரஸ், போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் தோல்வியை தழுவியது.

இதற்கிடையில் கட்சிக்குள் நடக்கும் கோஷ்டி மோதலால் காங்கிரஸ் தலைமையிடத்துக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது,

மேலும் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தெரிவித்துவிட்ட நிலையில், அடுத்த தலைவராக யாரை நியமிப்பது என கட்சி மேலிடம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்

இந்த தலைவர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது தமிழக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு ஆவார், இவர் ஏற்கனவே தேர்தலில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தது கட்சி மேலிடத்தை கவர்ந்தது, அதுமட்டுமின்றி இளங்கோவன் ஆதரவாளர்களும் குஷ்புவை தலைவராக நியமித்தால் சம்மதம் தெரிவிப்பார்கள், எனவே புதிதாக நியமிக்கப்படும் தலைவருக்கு எவ்வித எதிர்ப்பும் கிளம்பாது என கருதப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில், சோனியா காந்தியும், ராகுலும், குஷ்புவை டெல்லிக்கு அழைத்து பேசியுள்ளது கட்சி வட்டாரத்தில் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி கிடைத்தால் தான் ஏற்க தயார் என சமீபத்தில் குஷ்பு கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments